பிரபாஸை நேருக்கு நேர் மோதி வெற்றி கண்ட இயக்குனர்.. அடுத்த மோதலுக்கும் ரெடி என தைரியமாக விட்ட சவால்

Actor Prabhas: பாகுபலி படத்திற்கு பிறகு வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கும் பிரபாஸ், அடுத்தடுத்த படங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் சொதப்பி விடுகிறார். இதனால் அவருடைய படத்திற்கு சமீப காலமாகவே போதிய வரவேற்பு கிடைக்காமல் போகிறது.

அதிலும் சர்ச்சைக்குரிய இயக்குனரான விவேக் அக்னிஹோத்ரி மீண்டும் ஒருமுறை பிரபாஸுடன் மோதி ஜெயிக்க ரெடி என்று துணிச்சலுடன் சவால் விட்டிருக்கிறார். இது நிச்சயமாகவே பிரபாஸுக்கு சத்திய சோதனையாகவே அமைந்திருக்கிறது. கடந்த முறை பிரபாஸ் உடைய ‘ராதே ஷ்யாம்’ படத்துடன், பெரும் சர்ச்சையை கிளப்பிய ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் நேருக்கு நேர் மோதி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது.

Also Read: இதிகாச நாயகனாக முத்திரை குத்தப்பட்ட பிரபாஸ்.. தொடர்ந்து வம்பில் மாட்டும் பாகுபலி நாயகன்

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பாலிவுட் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போலவே இந்த முறை கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருக்கும் ‘சலார்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், மீண்டும் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இப்போது, ​​விவேக் அக்னிஹோத்ரி தனது அடுத்த படமான ‘தி வாக்சின் வார்’ படத்தை, ‘சலார்’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் அதே தினத்தில் படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான விவேக் அக்னிஹோத்ரி முடிவு எடுத்திருக்கிறார். பிரபாஸுடன் மீண்டும் மோதுவதற்கு தனக்கு எவ்வித அச்சமில்லை என்றும் மோதலுக்கு நான் ரெடி என்று சவால் விட்டுள்ளார்.

Also Read: பாக்ஸ் ஆபிஸை மிரள விட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ்.. அவமானப்படுத்தி அனுப்பிய சர்வதேச திரைப்பட விழா

இதன் மூலம் சர்ச்சைக்குரிய இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி பான் இந்தியன் ஸ்டார் ஆக இருக்கும் பிரபாஸ் மீது வெறுப்பு கொண்டவராக இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. அடிக்கடி அவரை மறைமுகமாக கிண்டல் செய்கிறார். அவர்களின் முந்தைய படங்களான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ மற்றும் ‘ராதே ஷ்யாம்’ ஆகியவற்றுக்கு இடையேயான மோதல் ஏற்பட்டு, அதில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் தான் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.

அதேபோலவே இந்த முறை ’தி வாக்சின் வார்’ மற்றும் ‘சலார்’ இடையே மோதல் உருவாகும் நிலையில், இந்த போட்டியின் முடிவைக் காண ரசிகர்கள் மட்டுமல்ல திரைப்பிரபலங்களும் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் விவேக் அக்னிஹோத்ரி தனது படம் மீண்டும் வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார். இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் எந்த படம் வெற்றிபெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: ரத்தம் சிந்திய சரித்திரம்.. பல சர்ச்சையை கிளப்பிய ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் ஒரு அலசல்