ஒரேடியாக அலைக்கழிக்கும் வெற்றிமாறன்.. புலிவாலை புடிச்சாச்சின்னு புலம்பித் தள்ளும் படக்குழு

Director Vettrimaran: வெற்றிமாறன் இயக்கிய படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று பல விருதுகளை வாங்கியுள்ளது. பெயருக்கு ஏத்த மாதிரி வெற்றி இயக்குனராக சினிமாவில் வலம் வருகிறார். அந்த வகையில் தற்போது படு ஜோராக மறுபடியும் வெற்றியை ருசிக்க வேண்டும் என்ற முனைப்பில் சுற்றி வருகிறார்.

அதாவது ருசி கண்ட பூனை மறுபடியும் ருசிக்காமல் விடாது. என்பதற்கு ஏற்ப வெற்றிமாறன் பலத்த வெற்றியை பார்த்து விட்டார். அதனால் மறுபடியும் அதை பார்த்தே ஆக வேண்டும் என்று முனைப்பில் இருக்கிறார். அதற்கு இவருடன் சேர்ந்து மொத்த படக்குழுவையும் படாத பாடு படுத்தி வருகிறார்.

அதாவது இந்த வருடம் வெளிவந்த விடுதலை முதல் பாகம் எதிர்பார்த்ததையும் மீறி பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் இப்படத்தின் முதல் பாகம் எடுக்கும் போதே இரண்டாம் பாகத்தின் முக்கால்வாசி காட்சிகளை எடுத்து முடித்து விட்டார். இதனை தொடர்ந்து மீதமுள்ள காட்சிகளுக்கான பணிகள் துவங்கியிருக்கிறது.

இப்படப்பிடிப்புக்காக கொடைக்கானலில் மொத்த படக்குழுவும் போயிருக்கிறார்கள். மீதமுள்ள காட்சியை எடுப்பதற்கு 30 நாட்கள் ஆகும் என்று அனைவரும் போன நிலையில் 15 நாட்களிலேயே திரும்பி விட்டார்கள். அதற்கு காரணம் வெற்றிமாறன் மீதமுள்ள காட்சியை 30 நாட்களில் எடுக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார்.

இப்படத்தை முழுமையாக எடுத்து முடிக்க எனக்கு 50 நாட்கள் வேண்டும் என பட குழுவினரிடம் சொல்லி அதற்காக தயாராக இருங்கள் என்று ஆடர் போட்டிருக்கிறார். மேலும் 15 நாட்களில் எடுத்த படப்பிடிப்பு அவருக்கு முழுமையாக திருப்தி அளிக்கவில்லையாம். அதனால் மறுபடியும் ஆரம்பித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்னும் இல்லை என்று படக்குழுவில் உள்ள அனைவரும் புலம்பி வருகிறார்கள்.

அதற்குக் காரணம் எல்லா விஷயத்திலும் ஓவர் பர்ஃபெக்க்ஷன் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அதனால் தான் பாதியிலே படப்பிடிப்பை நிறுத்திருக்கிறார். இதனால் படக்குழுவும் புலிவாலை புடிச்சாச்சின்னு எல்லாத்தையும் தாங்கி தான் ஆக வேண்டும் என்று இருக்கிறார்கள். ஆனாலும் இது எல்லாம் தெரிந்தும், கண்டும் காணாமல் வெற்றிமாறன் அவருடைய நோக்கத்தைக் மட்டுமே வைத்து பயணித்து வருகிறார்.