கடைசி மூச்சு இருக்க வர நடிச்சுக்கிட்டே தான் இருப்பேன்.. ரஜினிக்கு வரிசை கட்டி நிற்கும் 10 படங்கள்

Actor Rajini: தன்னுடைய 72 வயதிலும் மாஸ் ஹீரோவாக சினிமாவை ஆட்டிப் படைத்து கொண்டிருக்கும் ஒரே ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினி தான். இவருக்கு போட்டி இவரே தான் என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு படத்திற்கும் இவருடைய இமேஜை மெருகேற்றி வருகிறார். அதனால் தான் ரசிகர்கள் இவரை சூப்பர் ஸ்டார் என்று தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில் இவரைப் பற்றி ஒரு சில விஷயங்கள் கடந்த கொஞ்ச காலமாக வந்தது என்னவென்றால், இவருடைய கடைசி படமாக லோகேஷ் இயக்கத்தில் நடித்து முடித்துவிட்டு சினிமாவிற்கு எண்ட் கொடுக்கப் போகிறார் என்பதுதான். இதனால் இவருடைய ரசிகர்கள் பலரும் இனி இங்க தலைவரை திரையில் பார்க்க முடியாதா என்று சோகத்தில் இருந்தார்கள்.

ஆனால் தற்போது இந்த விஷயம் உண்மை இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஒரு கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணனிடம் பத்திரிகையாளர்கள், சூப்பர் ஸ்டார் இனி நடிக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது இது உண்மையா என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு ரஜினியின் அண்ணன், இதெல்லாம் உண்மை கிடையாது தொடர்ந்து இன்னும் 10 படங்களில் ரஜினி நடிக்க போவதாக கூறியிருக்கிறார். இதில் 5 திரைப்படங்களின் கதையை கேட்டு முடிவு செய்யப்பட்டு விட்டது. மீதமுள்ள படத்திற்கான கதையை கேட்டு வருகிறார். இதனால் ரஜினி தொடர்ந்து நடிக்கப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது.

இந்த ஒரு விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் சந்தோஷத்தை கொண்டாடி வருகிறார்கள். இதிலிருந்து ரஜினியின் இறுதி மூச்சு இருக்கும் வரை அவர் சினிமாவில் ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருப்பார் என்பது திட்டவட்டமாக தெரிந்து விட்டது. இனிமேல் இவருக்கு போட்டியாக வேறு யாராலும் இவருடைய இடத்துக்கு வர முடியாது.

இவருக்கு போட்டி இவரே தான் என்று சொல்லும் அளவிற்கு சினிமாவில் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி தான். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப் போகும் படம் தான் ரஜினிக்கு கடைசி படம் என்று வந்த செய்திகள் அனைத்தும் பொய்தான் என்று ஊர்ஜிதம் ஆகிவிட்டது.