வாய்ப்புகளை நிராகரிக்கும் விஜய் சேதுபதி.. வில்லன் கதாபாத்திரம் ஏற்க மறுக்கும் சூட்சமம்

Actor Vijay Sethupathi: தன் எதார்த்தமான நடிப்பினால் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து வரும் நடிகர் தான் விஜய் சேதுபதி. இந்நிலையில் வில்லனாக நடிக்க விருப்பம் இல்லை என இவர் அறிவித்த தகவல் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் இவர் ஏற்று நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் தன் தத்ரூபமான நடிப்பினை வெளிக்காட்டி பட்டைய கிளப்பி இருப்பார். ஹீரோவிற்கு நிகராய் வில்லன் கதாபாத்திரத்திற்கு கெத்தாய் மாறிவரும் இவரின் நடிப்பு ரசிகர்களால் ஈர்க்கப்பட்டது.

அவ்வாறு மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் தெறிக்க விட்ட இவர் பாலிவுட் பக்கம் சென்று ஷாருக்கானுக்கே மிரட்டல் விடும் அளவிற்கு டஃப் கொடுக்கும் நடிப்பினை வெளிக்காட்டி இருக்கிறார். இதை பார்த்துவிட்டு பாலிவுட் நடிகரான சல்மான்கான் அடுத்த படத்தில் இவரைத்தான் வில்லனாக நடிக்க வைக்க வேண்டும் என போன் போட்டு கூப்பிட்டு உள்ளார்.

அதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சரி வருகிறேன் என கூறிவிட்டு இப்படத்திற்கு சம்பளமாக 30 கோடியை கேட்டு உள்ளார். ஒருவேளை சம்பளம் அதிகமாக கேட்டால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காக இவர் போடும் பிளானாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் எதற்காக இவ்வளவு சம்பளம் உயர்த்தி கேட்டார் என்றால் தற்பொழுது இவருக்கு வில்லனாக நடிக்க விருப்பம் இல்லையாம். அதை வெளிப்படையாக சொல்ல விருப்பப்படாமல் அதிகம் சம்பளம் கேட்டாலும் அவர்கள் ஓடி விடுவார்கள் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார்.

இதையும் மீறி அந்த சம்பளத்தை கொடுத்தால் அதை வாங்கிக் கொண்டு நடிக்கலாம் என்ற எண்ணத்திலும் திட்டம் தீட்டி வருகிறார். தன் அடுத்த கட்ட படம் குறித்து தெளிவாக முடிவு எடுக்க விரும்பி இத்தகைய மாஸ்டர் பிளான் போட்டு வொர்க் அவுட் செய்து வருகிறார்.