தனுஷை மகனாக பார்த்த பிரபல நடிகர்.. அதுவே கடைசி படமாக முடிந்த பரிதாபம்

Actor Dhanush: தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார். அடுத்ததாக தனது 50 ஆவது படத்தை அவரே இயக்கி, நடிக்க இருக்கிறார். தனுஷ் எல்லோருடனும் எளிதில் பழகக் கூடியவர். அதேபோல் யாராக இருந்தாலும் மரியாதை கொடுத்து பேசக் கூடியவர் என பலர் தனுஷை பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார்கள்.

இந்நிலையில் பிரபல நடிகர் ஒருவர் தனுஷின் படத்தில் அப்பாவாக நடித்த நிலையில் தனது மகனாகவே தனுஷை பார்க்க ஆரம்பித்து விட்டாராம். இதை வீட்டில் வந்து சொல்லியும் மெய்சிலிர்த்து போய் உள்ளார் நடிகர். ஆனால் தனுஷின் படமே அந்த நடிகரின் கடைசி படமாக மாறியது தான் பலரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்தது.

அதாவது சிறந்த வில்லன் என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது ரகுவரன் தான். நடிப்பு அரக்கன் என்று தான் சொல்ல வேண்டும். வில்லன் மட்டுமல்ல குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பட்டையை கிளப்ப கூடியவர். அந்த வகையில் யாரடி நீ மோகினி படத்தில் முதலில் தனுஷின் அப்பாவாக ரகுவரனை நடிக்க வைக்க கேட்டுள்ளனர்.

ஆனால் ஆரம்பத்தில் ரகுவரன் இதில் நடிக்க மறுத்து விட்டாராம். அதன் பிறகு தனுஷ் நேரடியாக ரகுவரனை சந்தித்து நீங்கள் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என விரும்பி கேட்டுக் கொண்டுள்ளாராம். அதன்பிறகு தனுசுக்காக ரகுவரன் அந்தப் படத்தில் நடித்திருக்கிறார். படத்தில் நடிக்கும் போது தனது மகனைப் போலவே தனுஷை பார்த்து இருக்கிறார்.

அதாவது நடிகை ரோகினியை ரகுவரன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரிஷி என்ற ஒரு மகனும் உள்ளார். ரோகிணி மற்றும் ரகுவரன் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் மகனின் அன்புக்காக ரகுவரன் அடிமையாகி இருக்கிறார். ஏனென்றால் மகனின் மீது கொள்ளை பிரியம் வைத்திருந்தாராம்.

அந்த சமயத்தில் தனுஷை பார்க்கும்போது தன்னுடைய மகனைப் போலவே எண்ணி இருக்கிறார். மேலும் யாரடி நீ மோகினி படத்தில் ரகுவரன் இறந்தது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். நிஜவாழ்க்கையிலும் அந்த படத்திற்கு பிறகு ரகுவரனால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதாவது யாரடி நீ மோகினி படத்தில் நடித்த பிறகு ரகுவரன் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்து விட்டார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →