வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பாலச்சந்தர், இளையராஜா காம்போவில் வெற்றி கண்ட 5 படங்கள்.. ஈகோவால் துண்டு துண்டாய் போன பந்தம்

K Balachander-Illaiyaraja: தன் குரல் வளத்தால் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பும் பாடல்களை மேற்கொண்டு தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் இளையராஜா. இந்நிலையில் இவர் பாலச்சந்தர் இயக்கத்தில் மேற்கொண்ட 5 படங்களை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

80 காலகட்டத்தில், பாரதிராஜா, மணிரத்தினம், பாக்யராஜ் போன்ற இயக்குனர்களின் படத்திற்கு இசைஞானியின் பாட்டு தான் போடப்பட்டது. தன் பாடலால் சூப்பர் ஹிட் கொடுத்து வந்த இவர் மக்களின் கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: வாய் சவடால், அஜித் படத்தை தரை குறைவாக பேசிய இயக்குனர்.. அடாவடி பேச்சுக்கு ஆப்படித்த சம்பவம்

இந்நிலையில் எம் எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில் படங்களை இயக்கி வெளியிட்டு வெற்றி கண்டு வந்த இயக்குனர் தான் கே பாலச்சந்தர். புகழின் உச்சியில் இருந்த இளையராஜா இசையில் இசையமைக்க ஆர்வம் காட்டி வந்தார்கள். ஆனால் கே பாலச்சந்தர், இளையராஜா மீது எந்த ஒரு ஆர்வமும் காட்டாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் தான் தன் நண்பர்களின் பேச்சிற்கிணங்க, கே பாலச்சந்தர் இசைஞானியை முதன்முதலாக சிந்து பைரவி படத்தில் இசையமைக்க ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்தே இப்படத்தில் வெளியான பாடறியேன் படிப்பறிவேன் போன்ற பாடல்களை பாடி மிகப்பெரிய வெற்றியை இப்படத்திற்கு பெற்றுத் தந்தார்.

Also Read: ரிலீசுக்கு முன்னாடி கலெக்ஷன் பார்த்துடனும்.. உசுர கொடுத்து மேடையில் ரஜினி பேசியதன் காரணம்

அதை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்த படம் தான் புன்னகை மன்னன் இப்படத்தில் மேற்கத்திய இசையை தமிழ் படத்தில் அறிமுகப்படுத்தினார் இளையராஜா. அவை வித்தியாசமான அனுபவத்தோடு மக்களின் பேராதரவை பெற்றுத் தந்தது. மேலும் மனதில் உறுதி வேண்டும் என்னும் படத்தில் இவர்கள் இருவரின் காம்போவில் இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.

அதைத் தொடர்ந்து உன்னால் முடியும் தம்பி இன்னும் படத்தில் இருவரும் பணிபுரியும் போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வசனம் மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இளையராஜா கூறியது கே பாலச்சந்தருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன் பின் கருத்து வேறுபாடுகளோடு இருவரும் உச்சத்தில் இருந்தாலும், புதுப்புது அர்த்தங்கள் படத்தில் சூப்பர் ஹிட் பாடலை இசையமைத்து கொடுத்தார் இளையராஜா. அதை தொடர்ந்து இவர்கள் இருவரும் எந்த படமும் இணைந்து பணிபுரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அஜித்தின் கேரியரை காலி செய்து ப்ளாப்பான 6 படங்கள்.. காசு போட்ட முதலாளி கூட இன்னொரு வாட்டி பாக்க மாட்டாங்க

Trending News