திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சூப்பர் ஸ்டார், நெல்சன் காம்போ வெற்றி பெற்றதா.? முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்

Jailer Collection Report: சூப்பர் ஸ்டார் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் ஜெயிலர் நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. இதற்காகவே காத்திருந்த ரசிகர்கள் நேற்று படத்திற்கு அமோக வரவேற்பை கொடுத்தனர்.

அதிலும் நெல்சன் சூப்பர் ஸ்டாருக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்திருக்கிறார் என்ற பாராட்டுக்களும் இப்போது குவிந்து வருகிறது. படத்தில் குறிப்பிட்டு சொல்லும் படியாக சில நெகட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் அதையெல்லாம் ஓரம் கட்டும் அளவுக்கு இருக்கிறது சூப்பர் ஸ்டாரின் அலப்பறை.

Also read: கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிய நெல்சன்.. ஜெயிலர் படத்தில் இருக்கும் நிறை, குறைகள்

அதனாலேயே தற்போது இப்படம் முதல் நாளிலேயே தாறுமாறான வசூலை பெற்றிருக்கிறது. அந்த வகையில் தற்போது வரை ஜெயிலர் இந்திய அளவில் 60 கோடி வரை வசூல் வேட்டையாடி இருக்கிறது. அதில் தமிழ்நாட்டில் மட்டுமே 23 கோடிகளை தட்டி தூக்கி இருக்கிறது.

அதை அடுத்து கர்நாடகாவில் 11 கோடியும் கேரளாவில் 5 கோடியும் வசூல் லாபம் பெற்றிருக்கிறது. மேலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் 10 கோடி வரை வசூலித்திருக்கிறது. இது தவிர மற்ற மாநிலங்களிலும் நல்ல லாபம் கிடைத்திருக்கிறது.

Also read: எளிமையின் மொத்த உருவமாய் இருக்கும் சூப்பர் ஸ்டார்.. இமயமலையிலிருந்து வெளியான லேட்டஸ்ட் போட்டோ

அது மட்டுமல்லாமல் ஓவர் சீசிலும் ஜெயிலர் பட்டையை கிளப்பி இருக்கிறது. அந்த வகையில் அமெரிக்காவில் ஜெயிலர் 1.45 மில்லியன் வசூலை பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து மலேசியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் வசூல் தாறுமாறாக இருக்கிறது. அதன்படி பார்த்தால் உலகம் முழுவதிலும் ஜெயிலர் 100 கோடி கலெக்ஷனை நெருங்கி விட்டது.

இவ்வாறாக அனைத்து இடங்களிலும் நல்ல ஓப்பனிங்கை பெற்றிருக்கும் ஜெயிலர் இன்றும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக விடுமுறை நாட்களும் வர இருப்பதால் ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை ஆடும் என்ற கருத்துக்கணிப்புகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்ற பல படங்களின் முதல் நாள் சாதனையை ஜெயிலர் முறியடித்து மாஸ் காட்டி இருக்கிறது.

Also read: ஐட்டம் பாட்டுக்கு இத்தனை கோடியா.? ஜெயிலர் படத்துக்காக தமன்னா வாங்கிய சம்பளம்

Trending News