சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

6வது நாளிலும் கொட்டும் பணமழை.. ஜெயிலர் 1000 கோடி தொட்டாலும் அத உடைக்க இவரால மட்டும் தான் முடியும்

Jailer TN Box Office Collection Report: தர்பார், அண்ணாத்த படத்தால் ஏமாற்று ரசிகர்களுக்கு நிச்சயம் திரை விருந்து அளிக்க வேண்டும் என சூப்பர் ஸ்டார் கொடுத்த படம் தான் ஜெயிலர், கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான இந்த படம்  தொடர்ந்து ஆறு நாட்களில் உலக அளவில் 400 கோடி வசூலை கடந்திருக்கிறது.   ஆனால் தமிழகத்தில் மட்டும் இந்த படத்தின் 6 நாள் மொத்த வசூல் விவரம் எவ்வளவு என்று புள்ளி விபரம் வெளியாகி கோலிவுட்டை மகிழ்ச்சியில் திழைக்க வைத்திருக்கிறது.

உலக அளவில் கொண்டாடக்கூடிய ஜெயிலர் படத்திற்கு தமிழகத்தில் தொடர்ந்து அமோக வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ரஜினியை  திரையரங்கில் கொண்டாடி  கொண்டிருக்கின்றனர். அதன் விளைவாக ஒவ்வொரு நாளும் அதன் வசூல்  அதிகரித்துக் கொண்டே போகிறது.

Also Read: தொடர் வசூல் வேட்டை ஆடி வரும் ஜெயிலர்.. 6 நாள் கலெக்ஷனில் ஓரம் கட்டப்பட்ட மூன்று பிரம்மாண்ட படங்கள்

முதல் நாளில் தமிழகத்தில் ஜெயிலர் படம்  29.46 கோடியையும், அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளில் 20. 25 கோடியையும் வசூலித்து  மிரட்டியது. அதுமட்டுமல்ல மூன்றாவது நாளில் 26.38 கோடியையும்,  நான்காவது நாளில் அதிகபட்சமாக 31.04 கோடியையும், ஐந்தாவது நாளில் 15. 70 கோடியையும், ஆறாவது நாளில் 24.85 கோடியையும் ஜெயிலர் படம் வசூலித்து சாதனை புரிந்திருக்கிறது.

இவ்வாறு ஒத்து மொத்தமாக முதல் நாளிலிருந்து ஆறாவது நாளான நேற்று வரை இதுவரை ஜெயிலர் தமிழகத்தில் மட்டும் 147.68 கோடியை  அசால்டாக பாக்ஸ் ஆபிஸில் பணம் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுகிறது. இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான தர்பார், அண்ணாத்த படங்கள் எல்லாம் 200 கோடி வசூலுக்கு போராடி கொண்டிருந்த நிலையில், வெறும் 6 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 150 கோடியை தொட்ட ஜெயிலர்  திரைப்படம் ரஜினியின் இண்டஸ்ட்ரியல் ஹிட் என்று சொல்லலாம்.

Also Read: 2 நேரம் மலை ஏறி தியானம் செய்த ரஜினி.. குகைக்குள் பாபா வைரல் புகைப்படம்

இந்த 72-வது வயதிலும் நான்தான் சூப்பர் ஸ்டார் என்பதை காட்டுவதற்காகவும் ரஜினி இந்த படத்தில் முழு கவனம் செலுத்தி இருப்பது திரையில் தெரிகிறது. அது மட்டுமல்ல பீஸ்ட் படத்தில் ட்ரோல் செய்யப்பட்ட நெல்சன்  இந்தப் படத்தில் பவர்ஃபுல்லான பர்ஃபார்மென்ஸ்-ஐ காட்டி  மாஸ் காட்சிகளையும், காமெடி, குடும்பம், குத்துப்பாட்டு என அத்தனை கமர்ஷியல் ஃபார்முலாவையும் தரை இறக்கியது தான் இந்த படத்தின் வசூல் வேட்டைக்கு முக்கிய காரணம்.

 அது மட்டுமல்ல இந்த படம் வெளிநாடுகளிலும் தரமான சம்பவத்தை செய்து கொண்டிருக்கிறது. இதே வேகத்தில் சென்றால் நிச்சயம் ஜெயிலர்  முதல் வார முடிவில் 500 கோடியையும், இரண்டாவது வாரத்தில் இதைவிட பெரிய வசூல் வேட்டையும் நடக்கும் என்று திரை விமர்சகர்கள் விமர்சித்துள்ளனர். இதற்குப் பிறகு ஜெயிலர் 1000 கோடி தொட்டாலும் அந்த ரெக்கார்டை நிச்சயம் ரஜினியால் மட்டுமே உடைக்க முடியும் என்றும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கெத்து காட்டுகின்றனர்.

Also Read: முத்துவேல் பாண்டியன் காட்டிய பயம்.. நடு நடுங்கி போய் பின்வாங்கிய மாஸ் ஹீரோக்கள்

- Advertisement -spot_img

Trending News