Actor Rajini: நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினி நடிப்பில் மாபெரும் பிளாக்பஸ்டர் படமாய் ஜெயிலர் படம் வெளிவந்து, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்தில் வில்லனாக தெறிக்க விட்ட நடிகர் ஒருவர் நிஜத்தில் ஹீரோவாய் மாறிய சம்பவம் குறித்த தகவலை இத்தொகுப்பில் காணலாம்.
அக்காலத்தில் இருந்து ரஜினியுடன் ட்ராவல் செய்து வரும் துணை நடிகர் தான் சுமன். ஹீரோவான உடல்வாகுக் கொண்ட இவர் வில்லன் கதாபாத்திரத்திற்கே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்திருக்கிறார்.
Also Read: அழகை காப்பாற்றிக் கொள்ள ஊசி, கருக்கலைப்பு, கள்ளக்காதல்.. ரஜினி மருமகளின் மறுமுகம்
அவ்வாறு 1981 ஆம் ஆண்டு கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் தீ. இப்படத்தில் ரஜினிகாந்த், சுமன், ஸ்ரீபிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் ரஜினியின் தம்பியாய் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார் சுமன்.
தன் அண்ணனின் கடத்தல் குறித்த விவகாரங்களை அறிந்து பழிவாங்கும் நேர்மை போலீஸ் அதிகாரியாய் தன் நடிப்பினை மேற்கொண்டு இருப்பார். மேலும் அதைத்தொடர்ந்து பல படங்களில் வில்லனாய் அவதரித்த இவர் சிவாஜி படத்திலும் ரஜினிக்கு வில்லனாய் தெறிக்க விட்டிருப்பார்.
Also Read: லியோ பட வசூலை தொம்சம் செய்ய ரிலீஸ் ஆகும் 3 முக்கிய படங்கள்.. லோகேஷ், தளபதியை புலம்ப விட்டுட்டாங்க!
அவ்வாறு சினிமாவில் வில்லனாகவே பார்க்கப்பட்ட இவர் நிஜத்தில் ஹீரோவாய் மாறிய சம்பவம் கேட்பவரை ஆச்சரியம் கொள்ள செய்து வருகிறது. அதற்கு உதாரணமாக ராணுவ வீரர்களுக்காக தன்னுடைய கனவை தியாகம் செய்த சம்பவம் பலரால் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
மேலும் இவர் நடிக்கும் காலத்தில் பெற்ற சம்பளத்தை கொண்டு சுமார் 180 ஏக்கர் நிலத்தை வாங்கி போட்டுள்ளார். அவற்றில் தன் கடைசி காலத்தில், ஸ்டூடியோ ஒன்றைக் கட்டி சப்போர்ட் ஆக வைத்திருக்கலாம் என்ற கனவில் இருந்த இவர் ஹீரோ போன்று தற்பொழுது கார்கில் ராணுவ வீரர்களுக்காக இலவசமாக வழங்கியுள்ளார். இத்தகைய நிகழ்வு இவரின் பெருந்தன்மையை வெளிப்படுத்துகிறது. அவ்வாறு வில்லனாய் பார்க்கப்பட்ட இவர் தற்போது நிஜத்தில் ஹீரோவாய் மாறி அசத்தியுள்ளார்.
Also Read: சிவாஜி விழாவில் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட அவமானம்.. கெத்து காட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி