செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தனுசுக்கு வரிசை கட்டி நிற்கும் 5 படங்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்

Dhanush Upcoming Films: தனுசுக்கு சமீபகாலமாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த படமும் பெரிய வெற்றி கொடுக்கவில்லை. ஆனால் அவரது அடுத்தடுத்த படங்கள் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் தனுஷ் இருக்கிறார். அதன்படி அவருக்கு 5 படங்கள் வரிசை கட்டி நிற்கிறது. அந்தப் படங்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

கேப்டன் மில்லர் : அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் கேப்டன் மில்லர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. ஹிஸ்டாரிக்கல் படமாக கேப்டன் மில்லர் உருவாகியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

Also Read : அதிர்ஷ்டம் இல்லாத விஜய், தனுஷ்.. துணிந்து கையில் எடுக்கும் சூர்யா, ஒரேடியா காலவாரிடாம பாஸ்!

தனுஷ் 50 : தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பண்ண இருக்கிறார். இந்த படத்தை அவரே இயக்கி, நடிக்க இருக்கிறாராம். இந்த படம் முழுக்க மொட்டை உடன் தான் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.

நெல்சன் திலீப்குமார் : ரஜினியின் ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக தனுஷ் படத்தை இயக்க இருக்கிறார். மேலும் இப்படத்தை கமல் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் சார்பாக தயாரிக்க இருக்கிறார். முதல் முறையாக நெல்சன் உடன் தனுஷ் கூட்டணி போடுவதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

Also Read : அசுர வேகத்தில் தனுஷ் வளர காரணமாக இருந்த 5 வெற்றி படங்கள்.. சவுக்கடி கொடுத்த பொல்லாதவன்

சேகர் கம்முலா : தனுஷின் 51வது படத்தை சேகர் கம்முலா இயக்க இருக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் இவர் முதல்முறையாக தனுஷ் படத்தை இயக்க இருக்கிறார். ஏற்கனவே தெலுங்கில் தனுஷ் வாத்தி படத்தில் நடித்திருந்தார். இந்த சூழலில் தனுஷ் 51 ஆவது படமும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி கிரே மேன் 2 : ஹாலிவுட்டில்தி கிரே மேன் என்ற படத்தில் தனுஷ் நடித்திருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகமும் தற்போது சைலண்டாக உருவாகி இருக்கிறது. இதில் தனுஷ் வில்லனாக நடித்து இருக்கிறார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதால் பாலிவுட்டிலும் தனுஷ் ஒரு ரவுண்ட் வர உள்ளார்.

Also Read : தனுஷ் அதிரடியாய் கலக்கிய சமீபத்திய 6 படங்கள்.. சைக்கோவாய் மிரட்டிய நானே வருவேன்

Trending News