திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் பரத்.. ஜெயம் ரவியால் கேரியர் போச்சு என புலம்பல்

Bharath, Jayamravi: காதல் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான பரத் தொடர்ந்து சில ஹிட் படங்களை கொடுத்து வந்தார். எம்டன் மகன் அவரது திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. மேலும் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் பரத் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் தொடர் பிளாப் படங்களை கொடுத்து வந்ததால் பரத் சினிமாவில் காணாமல் போய்விட்டார்.

இந்த சூழலில் இப்போது வாணி போஜன் உடன் இணைந்த லவ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் பிரமோஷனுக்காக பல்வேறு யூடியூப் சேனல்களில் பரத் பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் தனது கேரியர் போனதற்காக கூறிய காரணம் தான் வேடிக்கையாக இருக்கிறது.

Also Read : சின்ன பிள்ளைத்தனமா பட்டத்துக்கு அலையற ஆளு இல்ல.. மறைமுகமாக தாக்கி பேசிய பரத்

அதாவது பரத் மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடிப்பில் நேபாளி என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் சில மோசமான காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டிருந்தது. அதோடு மட்டுமல்லாமல் இந்த கதைக்களமும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் தோல்வியுற்றது.

ஆனால் இப்போது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் அளவிற்கு ஒரு கதையை உருட்டி இருக்கிறார் பரத். அதாவது நேபாளி படம் வெளியான போது ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்பிரமணியபுரம் வெளியாகி இருந்தது. இந்த படம் குடும்ப சப்ஜெக்ட்டாக இருந்ததால் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

Also Read : தொடர்ந்து மூன்று ஹிட் கொடுத்த 5 சக்ஸஸ்ஃபுல் நடிகர்கள்.. பெயரை உடைத்து வெற்றி கண்ட ஜெயம் ரவி

மேலும் ஜெயம் ரவி படத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக நேபாளி படம் திரையரங்குகளில் ஓடவில்லை. ஆகையால் இந்த படம் தோல்வியுற்ற வசூலில் பாதிப்பை ஏற்பட்டதாகவும், தனது கேரியர் போய்விட்டது என்பது போல பரத் புலம்பி இருக்கிறார். ஒரு ஹீரோவுக்கு வெற்றி மற்றும் தோல்வி என்பது சாதாரண தான்.

எல்லோருமே தொடர்ந்து வெற்றி படங்களை மட்டும் கொடுத்து விட முடியாது. திறமை இருந்தால் கண்டிப்பாக அடுத்த படத்தில் வெற்றிக்கொடுத்த கேரியரை தக்க வைத்துக் கொள்ளலாம். ஏன் ஜெயம் ரவி கூட நடுவில் பல பிளாப் கொடுத்தாலும் இப்போது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனால் பரத் இவ்வாறு சொன்னது வேடிக்கையாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Also Read : என் வாழ்க்கையிலே உருப்படியான படம் இதுதான்.. பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் ஜெயம் ரவி போட்ட பூஜை

Trending News