செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கூர்க்காவை வைத்து விரட்டியடிக்கப்பட்ட விஜய்.. அவமானத்தால் எடுத்த விபரீத முடிவு

Actor Vijay: விஜய் இப்போது தன்னுடைய அரசியல் நகர்வுக்கான வேலையை வெளிப்படையாகவே ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் மாணவர்களுடன் இவர் நடத்திய சந்திப்பு ஒட்டுமொத்த மீடியாக்களின் கவனத்தையும் ஈர்த்தது. அது மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரங்களில் கூட சலசலப்பை ஏற்படுத்தியது.

தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ள இவர் தளபதி 68 படத்தை முடித்து விட்டு சினிமாவிற்கு சிறிது காலம் பிரேக் எடுக்க போவதாக கூட தகவல்கள் கசிந்து வருகிறது. இப்படி விஜய்யின் அரசியல் வருகையை அனைவரும் எதிர்நோக்கி கொண்டிருக்கும் வேளையில் இதற்கு பின்னணி காரணம் என்ன என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

Also read: விஜய் கூட நடிக்கும் போதே அந்த படம் பிளாப் ஆயிடும்னு தெரியும்.. எரியுற நெருப்புல எண்ணெய் ஊற்றிய நடிகை

அதாவது தலைவா படத்தின் போது நடந்த பிரச்சனை தான் விஜய்யின் மனதில் அரசியலுக்கு வர வேண்டும் என்ற நினைப்பை ஆழமாக விதைத்து விட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்த அந்த சமயத்தில் தான் தலைவா படம் ரிலீஸ் ஆவதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டது.

இதனால் விஜய் வேறு வழி இல்லாமல் அவரை சந்திக்க முற்பட்டார். சில பல இழுபறிகளுக்குப் பிறகு முதல்வரை சந்திப்பதற்கான அனுமதியும் கிடைத்தது. அதற்காக விஜய் தன் அப்பாவுடன் கொடநாடு சென்றார். ஆனால் விஜய்யை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நினைப்பில் ஜெயலலிதா அவரை உள்ளே கூட வரவிடாமல் கூர்காவை விட்டு விரட்டி அடித்தார்.

Also read: மார்க்கெட் இல்லை என்றாலும் தூக்கிவிட நினைக்கும் வெங்கட்பிரபு.. விஜய்யின் உடன்பிறப்பாக நடிக்கப் போகும் ஹீரோ

எதற்காக இப்படி நடக்கிறது என்றே தெரியாமல் விஜய் அவமானத்தோடு அங்கிருந்து வந்திருக்கிறார். அதன் பிறகு காவலன் படத்திற்கும் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. இப்படி அரசியல் ரீதியாக நடந்த அவமானத்தினால் தான் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்து அதை தற்போது செயல்படுத்தும் முனைப்பிலும் இருக்கிறார்.

அதன் முதல் படியாக தான் அவர் இப்போது மாணவர் சமுதாயத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார். அதை தொடர்ந்து இன்னும் பல பிளான்களையும் அவர் சத்தம் இல்லாமல் போட்டு வருகிறார். அந்த வகையில் முடிவு செய்ததை நிறைவேற்றிய ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் விஜய் விரைவில் தன் அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: யாரு சொன்னா விஜய்ய தப்பா பேசினாருன்னு.. தூக்கி விட்டு அழகு பார்த்த ரஜினி, இவர் கூடவா போட்டி?

Trending News