புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பாப் கட்டிங் ஹேர் ஸ்டைலில் குஷ்பூ.. நியூ லுக்கை பார்த்து ஆடிப்போன கோலிவுட்

Actress Khushboo: குஷ்பூ சமீபகாலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க அவர் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் வைரலாகி வருகிறது. குஷ்பூ என்றாலே சற்று குண்டான தோற்றத்துடன் பப்லியாக இருப்பவராக தான் ரசிகர்கள் மனதில் பதிந்திருந்தார். தான் கதாநாயகியாக இருக்கும் போதும் தனது உடல் எடையை குறைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை.

அதுமட்டுமல்லாமல் குஷ்பூவின் அந்த தோற்றம் தான் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து இருந்தது. ஆனால் இப்போது குஷ்பூ படங்களில் அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்த குஷ்பூ அரசியலிலும் முழு வீச்சாக செயல்பட்டு வருகிறார்.

Also Read : 2k கிட்ஸ் தோத்துருவாங்க போங்க.. தலைவர் ஸ்டைலில் இறுக்கி அணைச்சு முத்தம் கொடுத்த குஷ்பூவின் புகைப்படம்

ஆனால் சமீபகாலமாக குஷ்பூ தனது உடல் எடையை அதிரடியாக குறைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வந்தார். மேலும் 18 வருடத்திற்கு முன்பு அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட் தனக்கு இப்போது கச்சிதமாக பொருந்துவதாக போட்டோக்களையும் வெளியிட்டு வந்தார். அதுவும் வெளிநாடு சுற்றுலாவில் மாடர்ன் உடையில் கலக்கினார்.

இவ்வாறு குஷ்பூ செய்யும் ஒவ்வொரு விஷயமும் கவனம் ஈர்த்து வந்த நிலையில் இப்போது அவரது ஹேர் ஸ்டைல் இணையத்தில் ட்ரெண்டாகி இருக்கிறது. அதாவது குஷ்பூ அடர்த்தியான கூந்தல் உடையவர். அவருடைய ஹேர் ஸ்டைலை பார்த்து பல பெண்கள் பொறாமை பட்டு இருக்கிறார்கள்.

Also Read : அப்பாவை மிஞ்சிய உயரம், அமுல் பேபி போல் இருக்கும் அவந்திகா புகைப்படம்.. குஷ்பூவை ஓவர் டேக் செய்யும் அழகு

இப்போதும் குஷ்பூ தனது கூந்தலை அழகாக பராமரித்து வந்தார். ஆனால் திடீரென பாப் கட்டிங் ஹேர் ஸ்டைல் வைத்திருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். ஏன் இந்த திடீர் முடிவு என்றும் கேள்வி கேட்டு வருகிறார்கள். ஆனாலும் இந்த நியூ லுக்கும் குஷ்புக்கு அழகாகத்தான் இருக்கிறது.

குஷ்பூ பாப் கட்டிங் ஹேர் ஸ்டைல்

khusboo
kushboo

மேலும் உண்மையாகவே குஷ்பூ பாப் கட்டிங் ஹேர் ஸ்டைல் வைத்திருக்கிறாரா அல்லது வீக்கா எனவும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். சிலர் குஷ்பூவை பார்ப்பதற்கு பாபி டால் போல் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் குஷ்புவின் இந்த புகைப்படம் தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.

பாபி டால் போல் இருக்கும் குஷ்பூ

khusboo-sundar
kushboo-sundar

Also Read : ரசிகர்களால் கடவுளாக பார்க்கப்பட்டு கோவில் கட்டப்பட்ட 6 நடிகைகள்.. குஷ்பூவால் ஆரம்பித்த மட்டமான வேலை

Trending News