Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 13 வது ஆண்டு திருமண நாளை இன்று கொண்டாடி இருக்கிறார். திருமண நாளை ஒட்டி தன்னுடைய மனைவி ஆர்த்தி சிவகார்த்திகேயனுக்கு சமூக வலைத்தள பக்கத்தில் க்யூட்டாக பகிர்ந்த பதிவு ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. ரசிகர்களும், பிரபலங்களும் தம்பதிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றன.
தமிழ் சினிமா உலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன், ஆரம்ப காலகட்டத்தில் சின்ன திரையில் ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும், தொகுப்பாளராகவும் தன்னுடைய பயணத்தை தொடங்கி, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர்.
இவருக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை போன்ற படங்கள் ஆரம்ப காலகட்டத்தில் நல்ல வரவேற்பை கொடுக்க அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி ஹீரோவாக வெற்றி கண்டார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான மாவீரன் படம் சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது.
சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருக்கும் பொழுதே தன்னுடைய உறவுக்கார பெண்ணான ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஆராதனா சிவகார்த்திகேயன், குகன் தாஸ் சிவகார்த்திகேயன் என்ற இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். இதில் அவருடைய மகள் ஆராதனா சிவகார்த்திகேயன் கனா படத்தில் வாயாடி பெத்த புள்ள என்னும் பாடலை பாடி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறார்.
இன்று தன்னுடைய 13 வது வருட திருமண நாளை கொண்டாடும் சிவகார்த்திகேயன், தன்னுடைய மனைவி ஆர்த்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, என் சந்தோஷ கண்ணீரே என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த க்யூட்டான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மாவீரன் திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படம் வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. மேலும் உலகநாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் தன்னுடைய 21 வது படத்தில் சிவா தற்போது நடித்து வருகிறார்.