ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அப்பாவை பழிவாங்க விபரீத முடிவை எடுத்த வனிதா.. எல்லா பிரச்சனைக்கும் காரணம் அவர்தான்

Actress Vanith: பொதுவாக சர்ச்சையையும் இவரையும் பிரிக்கவே முடியாது, அந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் நினைத்ததை அனைத்தையும் பேசி ஆக்டிவாக இருக்கக்கூடியவர் தான் வனிதா. இவரைப் பற்றி தாறுமாறாக மோசமான விமர்சனங்களை பலரும் கொடுத்தாலும், அதை எல்லாம் அசால்டாக தனக்கு ஏற்ற மாதிரி பாசிட்டிவாக மாற்றக்கூடியவர்.

அப்படிப்பட்ட இவரின் திருமண வாழ்க்கை நினைத்தபடி இல்லாமல், இவருக்கு மிகவும் பிடித்தமான மகனும் இவருடன் இல்லாமல் இரண்டு மகளுடன் தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறார். இவரைப் பற்றி என்னதான் நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும் அதை எல்லாம் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத அளவிற்கு துணிச்சலுடன் போராடி வருகிறார்.

Also read: அரை கிழவியானாலும் அடுத்தடுத்த திருமணத்தை செய்த 5 நடிகைகள்.. வனிதா லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே

அப்படிப்பட்ட இவர் சமீபத்தில் இவருடைய வாழ்க்கை இந்த அளவிற்கு சீரழிந்ததற்கு காரணமானவரை பற்றி கூறி இருக்கிறார். அதாவது ஆரம்பத்தில் பணத்துக்காக என்னுடைய விருப்பமே இல்லாமல் என் அப்பா வலுக்கட்டாயமாக என்னை விஜய் படத்தில் நடிக்க வைத்தார். அப்பொழுது எனக்கு விவரம் தெரியாததால் அவர் சொல்வதை அனைத்தையும் வேதவாக்கு போல் எடுத்து கொண்டேன்.

ஆனால் அதிலும் என்னால் ஜெயிக்க முடியாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன். இருந்தாலும் என்னுடைய அப்பா எந்த இடத்திலும் என்னை ஒரு மகளாக நினைத்து பேசுவதில்லை. அதுவும் எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்திருக்கிறது. என்னை ஒரு மனுசியாக கூட அவர் மனதில் நினைப்பதில்லை.

Also read: டீன் ஏஜ் பெண்ணாக மாறிய வனிதாவின் மகள்.. கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கும் புகைப்படம்

இப்படிப்பட்ட இவரை பழி வாங்குவதற்காக தான் வனிதா விஜயகுமார் என்ற பெயரை வைத்து நான் கெட்டாலும் பரவாயில்லை என்று அவருடைய இமேஜை டேமேஜ் செய்யும் அளவிற்கு துணிந்து விட்டேன். இதெல்லாம் அவரை நான் பழி வாங்குவதற்கு ஆரம்பித்த விஷயங்கள் தான். என்னுடைய எல்லா பிரச்சனைக்கும் முக்கிய காரணம் என்னுடைய அப்பா தான்.

நான் தற்போது இந்த அளவிற்கு கஷ்டப்பட்டு இருப்பதற்கும் அவருடைய வறட்டு கௌரவம் தான் என்று அவர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைக்கிறார். ஆனால் இதுவே போகப் போக என்னுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. தற்போது யாருடைய தயவும் இல்லாமல் என்னால் சந்தோஷமாக வாழ முடிகிறது. இதற்கெல்லாம் என்னுடைய அம்மா கொடுத்த தைரியம் தான் காரணம் என்று கூறியிருக்கிறார்.

Also read: துக்கம் தொண்டையை அடைக்கும் அளவிற்கு அழும் வனிதா.. கூடிய சீக்கிரம் நானும் வரேன்!

Trending News