திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

ஜெயிலரை விட டபுள் மடங்கு நெல்சன் வாங்க போகும் சம்பளம்.. ஃபெவிக்கால் போட்டு ஒட்டிய சன் பிக்சர்ஸ்

Director Nelson Dilipkumar: இந்த மாதம் பத்தாம் தேதி நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் பட்டையைக் கிளப்பியது. இந்த படத்திற்குப் பிறகு நெல்சனின் மவுசு கூடிவிட்டது.

அதிலும் அவருடைய சம்பளம் கிடு கிடுவென உயர்ந்து நிற்கிறது. ஜெயிலர் படத்தை இயக்குவதற்காக நெல்சன் 22 கோடிகள் சம்பளம் வாங்கினார். ஆனால் ஜெயிலர் படத்திற்கு பின் இரண்டு மாதம் ஓய்வு என்றும் கூறினார். ஆனால் இப்பொழுது சன் பிக்சர்ஸ் அவரை விடுவதாக இல்லை.

Also Read: ஓடிடி ஜெயிலர் வசூலுக்கு ஆப்பு அடித்த விஷமிகள்.. என்னடா இது கலாநிதிக்கு வந்த சோதனை

அவரை ஃபெவிக்கால்போட்டு ஒட்டிக்கொண்டனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தை நெல்சன் தான் இயக்கப் போகிறார் அதற்காக அக்ரிமெண்ட் போட்டு அவரை கோழி அமுக்குவது போல் அமுக்கிவிட்டனர் சன் பிக்சர்ஸ்.

அதாவது யார் நடிகர், என்ன கதை என்றெல்லாம் இப்பொழுது முக்கியம் இல்லை. நீங்கள்தான் டைரக்ட் செய்ய வேண்டும் என்று 55 கோடிகள் கொடுத்திருக்கிறது.இந்த சம்மதம் ஜெயிலர் படத்திற்கு நெல்சன் வாங்கியதை விட இரண்டு மடங்கிற்கும் அதிகம்.

Also Read: வியாபாரத்திற்கு வந்த சிவாஜியின் அன்னை இல்லம்.. ரஜினி செய்த பெரிய உதவி

ஆனால் இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம் கலவையான விமர்சனத்தை பெற்ற போது, ஜெயிலர் படத்தை அவருக்கு கொடுக்கலாமா வேண்டாமா என தயங்கியது. ஆனால் ரஜினி நெல்சன் மீது வைத்த நம்பிக்கையால் எதைப்பற்றியும் யோசிக்காமல் அந்த வாய்ப்பைக் கொடுத்தார்.

இப்போது சன் பிக்சர்ஸ் ஜெயிலர் படத்தின் வெற்றியின் தொடர்ச்சியாக மறுபடியும் தங்களது தயாரிப்பில் தான் அடுத்த படத்தையும் இயக்க வேண்டும் என்று நெல்சனை லாக் செய்து விட்டனர். இதை காரணமாக காட்டி அவரும் தன்னுடைய சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி விட்டார்.

Also Read: ரஜினி கேட்ட சம்பளத்தை கொடுக்க மறுத்த சன் பிக்சர்ஸ்.. கொளுத்தி போட்ட பிரபலம்

- Advertisement -

Trending News