லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணிகள் இரண்டாவது முறையாக நடக்க போகும் தரமான சம்பவம் தான் லியோ. இந்த படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை அன்று ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் படத்தின் டிக்கெட் புக்கிங் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
எப்படியாவது லியோ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் குறைந்தது 700 கோடிகளையாவது வசூல் வேட்டை ஆட வேண்டும் என படக்குழு திட்டம் திட்டி வருகிறது. இந்நிலையில் அதன் டிக்கெட் புக்கிங் தேதிகளை முன்கூட்டியே வெளிநாட்டில் ஆரம்பிக்க பிளான் பண்ணுகின்றனர்.
Also Read: அடுத்தடுத்து 3 படங்கள் கமிட்டாகி வாங்கிய பெருந்தொகை.. ஜெயிலர் விநாயகன் காட்டில் கொட்டும் பேய் மழை
அதாவது செப்டம்பர் 7 ஆம் தேதியே லீயோ படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கவிருக்கிறது. கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு முன்னரே லியோ படத்தின் டிக்கெட் புக்கிங் ஆரம்பிக்கப்படுகிறது. இந்த விஷயத்திற்கு ரசிகர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இங்கே இல்லை, வெளிநாட்டில் குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆறு வாரங்களுக்கு முன்பே துவங்கப் போகிறது. ஒரு தமிழ் படத்திற்கு பிரிட்டனில் ஆறு வாரத்திற்கு முன்பே ப்ரீ புக்கிங் நடைபெறபோவது இதுவே முதல்முறை.
Also Read: ஜெயிலரை விட டபுள் மடங்கு நெல்சன் வாங்க போகும் சம்பளம்.. ஃபெவிக்கால் போட்டு ஒட்டிய சன் பிக்சர்ஸ்
அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம் வெளிநாட்டில் தான் படுஜோராக வசூல் சாதனை படைத்தது. இந்தப் படத்தின் வசூலை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்பதற்காகவே லியோ பட குழு பக்கா பிளான் போட்டு ஒவ்வொரு விஷயத்தையும் செய்து கொண்டிருக்கிறது.
இப்போது அவர்களது ஒரே குறிக்கோள் ஜெயிலர் படம் போல் லியோ படமும் உலக அளவில் தாறுமாறான வசூலை குவிக்க வேண்டும் என திட்டம் திட்டி வருகிறார்கள். அதற்காகத்தான் செப்டம்பர் 7ஆம் தேதியே படத்தின் டிக்கெட் முன்பதிவை துவங்கியிருக்கின்றனர்.
Also Read: லியோ கெஸ்ட் ரோலில் வரும் மலையாள பகவதி.. பால் பப்பாளியை முழு சோற்றில் மறைத்த லோகேஷ்