Actor Sivakarthikeyan: சமீபகாலமாக அட்ஜஸ்ட்மென்ட் தொல்லைகளைப் பற்றி நடிகைகள் வெளிப்படையாக போட்டு உடைத்து வருகின்றனர். ஆனாலும் இந்த பிரச்சனை தீர்ந்த பாடில்லை. அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் பட ஹீரோயின் ஒருவரும் தனக்கு நடந்த அந்தரங்க டார்ச்சர் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்தவர் தான் அனு இம்மானுவேல். தற்போது தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் கார்த்தியின் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் ஜப்பான் படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி பகீர் கிளப்பியுள்ளார். அந்த வகையில் இவர் சினிமாவுக்கு வந்த புதிதில் சமூகத்தின் முன்னால் பெரிய மனுஷனாக வலம் வரும் பலரும் இவரை வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு வா என்று அழைத்தார்களாம்.
அது மட்டுமல்லாமல் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் ஒருவரும் இவரை தன்னுடைய ஆசைக்கு இணங்கும் படி கேட்டிருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில நடிகைகள் பயந்து போவது வழக்கம். ஆனால் அனு இம்மானுவேல் இந்த பிரச்சனையை தைரியமாக தன் குடும்பத்தினரின் துணை கொண்டு சமாளித்திருக்கிறார்.
அது பற்றி கூறியிருக்கும் அனு, இது போன்ற பிரச்சனைகள் சினிமா நடிகைகளுக்கு மட்டுமல்லாமல் எல்லா துறைகளிலும் இருக்கும் பெண்களுக்கும் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் குடும்பத்தினரின் உதவியோடு சமாளிக்க வேண்டும்.
அவர்கள் தான் இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் நமக்கு பக்க பலமாக இருப்பார்கள். அதனால் பெண்கள் தன்னம்பிக்கையோடு இதுபோன்ற பிரச்சனைகளை கையாள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அவர் கூறிய இந்த கருத்துக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்து வருகிறது.