Actress Nayanthara: அட்லி இயக்கியுள்ள ஜவான் படத்தின் மூலம் தான் நயன்தாரா பாலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார். ஆனால் அவர் அங்கு என்ட்ரி கொடுப்பதற்கு முன்பே இந்த படத்தில் அவருக்கு போட்டியாக, ஹிந்தியில் ரவுண்ட் கட்டி நடித்துக் கொண்டிருக்கும் முன்னணி நடிகையை கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளனர்.
படத்தில் சில நிமிடத்திற்கு மட்டுமே கெஸ்ட் ரோலில் வந்திருக்கும் அந்த நடிகைக்கு படக்குழு பல கோடிகளை வாரி இறைத்திருக்கிறது. ஷாருக்கான் மிரட்டலான கெட்டப்பில் நடித்திருக்கும் ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி ரிலீசுகாக காத்திருக்கிறது.
இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர். அது மட்டுமல்ல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இதில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதில் ஹீரோயினாக நடித்திருக்கும் நயன்தாராவை போலவே இசையமைப்பாளர் அனிருத்தும் இந்த படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமாகிறார். இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்க தீபிகா படுகோன் 20 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம்.
இருப்பினும் படம் முழுக்க நடித்திருக்கும் கதாநாயகி நயன்தாராவிற்கு சம்பளம் 10 கோடி தான். ஆனால் அவரை விட இரண்டு மடங்கு அதிகமாக தீபிகா வாங்கி பலரையும் வாயடைக்க வைத்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் ஷாருக்கான் அப்பா, மகன் என்று இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் அப்பாவாக கதாபாத்திரத்திற்கு ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த கதாபாத்திரம் படத்தின் ஃப்ளாஷ் பேக் காட்சியில் வரும் முக்கிய கதாபாத்திரமாகும். மகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். பாலிவுட்டில் கால் பதிப்பதற்கும் முன்பே அங்கு இருக்கும் கதாநாயகி தீபிகா படுகோனே-வால் நயன்தாரா சம்பள விஷயத்தில் ஓரம் கட்டப்பட்டு இருப்பது தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.