Jailer-Rajini: ஜெயிலர் படத்தின் ரிலீஸ் நாள் நெருங்க நெருங்க சோசியல் மீடியா முழுவதும் பற்றி எரிந்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே ட்விட்டர் தளத்தில் சூப்பர் ஸ்டாரின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. அதிலும் சன் பிக்சர்ஸ் நாளுக்கு நாள் புதுப்புது அப்டேட் கொடுத்து ரசிகர்களை திணறடித்து கொண்டிருக்கிறது.
ஏற்கனவே படத்தின் பாடல்கள், இசை வெளியீட்டு விழாவில் தலைவர் பேசிய பேச்சு, காகம், பருந்து குட்டிக்கதை என ஒவ்வொன்றும் மீடியாக்களுக்கு தீனி போட்டு வருகிறது. இதுவே பரபரப்பை கிளப்பிய நிலையில் ஜெயிலர் படத்தின் ஷோகேஸ் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
Also read: ஜெயிலர் பட வசூலை தடுக்க போடும் ஸ்கெட்ச்.. உங்க உருட்டுக்கு ஒரு அளவே இல்லையா, கேளுங்க தளபதி
சில தினங்களாகவே இப்படத்தின் ட்ரெய்லருக்காக காத்திருந்த ரசிகர்கள் இது என்ன ஷோகேஸ் என்று குழப்பத்தில் ஆழ்ந்தாலும் அது என்ன என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாகவே இருந்தனர். மேலும் இது நிச்சயம் ட்ரெய்லர் தான், அதை தான் பட குழு வித்தியாசமாக அறிவித்திருக்கிறார்கள் என ஒரு பக்கம் பேசப்பட்டும் வந்தது.
இதனால் இன்று காலை முதலே சோசியல் மீடியா அமளி துமளியாகி வந்தது. அதுமட்டுமின்றி ஜெயிலர் ட்ரெய்லர் என்ற ஹேஷ் டேக்கும் ட்ரெண்ட் ஆனது. இப்படி பயங்கர எதிர்பார்ப்பை கிளப்பி இருந்த அந்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் இந்த ஷோகேஸ் வீடியோ படு மிரட்டலாக இருக்கிறது. இதன் ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் பூனை போல் இருப்பதாகவும் அதை தொடர்ந்து புலியாக மாறுவது போலவும் காட்டப்பட்டிருக்கிறது.
அதிலும் சாதுவாக இருக்கும் சூப்பர் ஸ்டார் அதிரடியாக மாறும் காட்சியும் ஓரளவுக்கு மேல நம்ம கிட்ட பேச்சே கிடையாது வீச்சு தான் போன்ற வசனமும் பட்டையை கிளப்புகிறது. பின்னணி இசை, சண்டை காட்சிகள், ஒளிப்பதிவு என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படி மிகப்பெரும் ஆர்வத்தை தூண்டி இருக்கும் இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.