10 பேரை வைத்து பந்தாடிய நூடுல்ஸ் பட ட்ரெய்லர்.. சஸ்பென்ஸ் திரில்லருக்கு பஞ்சமே இல்ல

Noodles Trailer: மதன் தட்சிணாமூர்த்தி இயக்கத்தில் ஹரிஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார், மதன், திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் நூடுல்ஸ். வரும் செப்டம்பர் 8-ம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் சஸ்பென்ஸ் நிறைந்த கதையாக எடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது அதாவது ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே ஹரிஷ் உத்தமன் தன் மனைவி ஷீலா மற்றும் குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருப்பது போன்று காட்டப்படுகிறது.

Also read: கல்யாணம் வேண்டாம், ஆனா புள்ள பெத்துக்கணும்.. மோசமான கதையில் ரீ என்ட்ரி கொடுத்த அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி ட்ரெய்லர்

அதைத்தொடர்ந்து ஹீரோ, போலீஸ் மற்றும் சிலருடன் ஆக்ரோஷமாக சண்டையிடுவது போன்றும் இதனால் சில எதிர்ப்புகளை சந்திப்பது போன்றும் ட்ரெய்லர் நகர்கிறது. அதில் எதிர்பாராத திருப்பமாக ஒரு கொலை நடப்பது போல் காட்டப்படுகிறது.

அதிலும் ஹீரோயின் ஷீலா நான் எதையும் தெரிந்தே செய்யவில்லை என்று கதறும் அந்த காட்சி இந்த கொலைக்கு பின்னணியில் இருக்கும் காரணத்தையும் தெளிவுப்படுத்துகிறது. கதையின் நாயகியாக பல படங்களில் தன்னை நிரூபித்திருக்கும் இவர் இந்த ட்ரெய்லரிலும் கவனம் ஈர்த்திருக்கிறார்.

Also read: போர் தொழிலுக்கு பிறகு வேட்டையாடத் தொடங்கிய சரத்குமார்.. நடுங்க வைக்கும் பரம்பொருள் ட்ரெய்லர்

அதைத்தொடர்ந்து இந்த பிரச்சனை போலீசிடம் செல்வதும் ஏற்கனவே இருந்த பகையால் ஹரிஷ் ஊத்தமன் திண்டாடுவதுமாக ட்ரெய்லர் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறாக வெறும் 10 பேரை மட்டுமே வைத்துக்கொண்டு இப்படத்தை எடுத்து முடித்து இருக்கிறார் இயக்குனர்.

அந்த வகையில் திகில் கலந்த சஸ்பென்ஸ் காட்சிகளுடன் வெளியாகி இருக்கும் இந்த நூடுல்ஸ் நிச்சயம் வரவேற்பு பெரும் என்பதில் சந்தேகம் இல்லை. சமீப காலமாக இது போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில் ஹரிஷ் உத்தமன், ஷீலா கூட்டணி புது முயற்சி உடன் களமிறங்கியுள்ளனர்.