Leo Movie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் லியோ ரிலீஸ் தேதியை குறிவைத்து இறங்கும் அக்கடதேச நடிகர்களை பற்றிய தகவலை இத்தொகுப்பில் காணலாம்.
வாரிசு படத்திற்கு பிறகு, விஜய் நடிப்பில் எதிர்பார்க்கப்படும் லியோ பட ரிலீஸ் தேதியை ஏற்கனவே லாக் செய்துள்ளனர்.மேலும் ஒரே தேதியில் நிறைய படங்கள் வெளிவந்தால் அவை வசூலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்த ஒன்றுதான். தற்பொழுது அந்த சூழ்நிலையில் தான் லியோ படமும் இருந்து வருகிறது.
வீரசிம்ஹா ரெட்டிக்கு பிறகு பாலகிருஷ்ணன் வேறு எந்த படமும் நடிக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்து ஒன்றுதான். இருப்பினும் தற்பொழுது இவர் நடிப்பில் உருவாகும் பகவந்த் கேசரி படத்தில் காஜல் அகர்வால், ஸ்ரீ லீலா, அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்கள். இப்படமும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வந்துள்ளது.
மேலும் ஜெயிலர் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் ஆன சிவராஜ் குமாரின் நரசிம்மன் கதாபாத்திரம் மக்களால் ஈர்க்கப்பட்டுள்ள நிலையில், மார்க்கெட்டில் மிகவும் டிமாண்டில் இருந்து வருகிறார். கன்னட மொழி படங்களில் சிவாண்ணாவின் நடிப்பை கொண்டாடியவர்கள் தற்போது தமிழிலும் கொண்டாடி வருகின்றனர்.
அவ்வாறு தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வரும் சிவராஜ்குமாரின் அடுத்த படம் தான் கோஸ்ட். இவரின் மஃப்டி படம் தற்போது தேடி தேடி பார்க்கப்பட்டு வரும் நிலையில், பக்கா என்டர்டைன்மென்ட் படமாய் உருவாகிய கோஸ்ட் படமும் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் டைகர் நாகேஸ்வரராவ் படமும் அக்டோபர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாம்.
இவை அக்கட தேச படங்களாக இருப்பினும் ஒரே நாட்களில் வெளி ஆகுவது, லியோ படத்தின் வசூலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது தற்போதைய புது தலைவலியாக பார்க்கப்பட்டு வருகிறது. அதுவும் ஜெயிலர் படத்திற்குப் பிறகு சிவாண்ணாவின் மார்க்கெட் உயர்ந்துள்ள நிலையில், விஜய்க்கு இப்படம் பிற மொழிகளில் ஓடுவது சவாலாக பார்க்கப்பட்டு வருகிறது.