Kamal-Rajini: சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை போல ரஜினி நடிப்பில் ஜெயிலர் படமும் மாபெரும் வெற்றியை கண்டது. இந்நிலையில் கமல் செய்த ஒன்றை இன்று வரை செய்ய தவறிவரும் ரஜினி பற்றிய தகவலை இத்தொகுப்பில் காணலாம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாய் கமலின் விக்ரம் படத்தை கொண்டாடி வந்தனர் ரசிகர்கள். இப்படத்தின் வெற்றியை கண்டு இதைப்போல படம் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார் ரஜினி. அதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படமும் உருவாக தொடங்கிவிட்டது.
இந்நிலையில் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படம் வசூலிலும், விமர்சனங்களிலும் மாபெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. அவ்வாறு இருவரும் அதிரி புதரியாய் ஹிட் கொடுத்து விட்டனர். அதுவும் வாழ்நாளில் இதுவரை பார்த்திடாத சம்பாத்தியத்தை இப்படங்களில் மூலம் அள்ளிவிட்டனர் என்றே கூறலாம்.
இந்நிலையில் விக்ரம் படத்தின் வசூலை வெளிப்படையாகவே கமல் சொல்லிவிட்டார். இவ்வளவு காசை நான் எந்த படத்திலும் பார்த்திடவில்லை இவை அனைத்தும் கூட்டு வெற்றியால் கிடைத்த ஒன்று எனவும் கூறி இருக்கிறார். அதைத்தொடர்ந்து கடைநிலை ஊழியரிலிருந்து உயர்நிலை ஊழியர் வரைக்கும் விக்ரம் படத்தில் வேலை செய்தவர்கள் அனைவருக்கும் விருந்து கொடுத்து விட்டார்.
ஆனால் ரஜினியோ மகளின் கல்யாணத்திற்கே விருந்து கொடுப்பதாக சொல்லி கொடுக்காமல் இதுவரை இருந்து வரும் நிலையில் தற்போது வசூல் வேட்டை கண்ட ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு மட்டும் விருந்து கொடுத்து விடுவாரா என்பது சந்தேகத்தை எழுப்பி வருகிறது.
ரஜினியை பொறுத்தவரை காசு விஷயத்தில் கரார் என்பதை நிரூபிக்கும் விதமாய் இவரின் நடவடிக்கை இருந்து வருவதாகவும். விருந்து விஷயத்தில் கமலை விட ரஜினி ஒரு படி கீழே தான் இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் இடையே பேச்சு பேசப்பட்டு வருகிறது.