திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அஜித் அன்றைக்கு சொன்ன தெய்வ வாக்கு, இப்ப பழித்துவிட்டது.. தலையில் தூக்கிக் கொண்டாடும் வில்லன் நடிகர்

Ajith Movie Villan Actor: கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நாயகனான அஜித் துணிவு படத்திற்கு பிறகு இப்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் வில்லன் நடிகருக்கு தெய்வ வாக்கு போல் அஜித் சொன்னது இப்போது நடந்து விட்டது. இதனால் அந்த நடிகர் அஜித்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார். 

மலையாள நடிகரான ஜான் கொக்கன் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வந்தார். அதன் பின் பாகுபலி, கேஜிஎஃப் படங்களின் தொடர்ச்சியாக பா. ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரர் வேம்புலியாக தோன்றினார்.

Also Read: வாரிசு நடிகையாக இருந்தாலும் விட மாட்டாங்க!. அஜித் பட இயக்குனரின் மகள் கூறிய அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை

அஜித் நடித்த துணிவு படத்தில் வில்லனாகவும் நடித்து அசத்தார். இந்நிலையில் ஜான் கொக்கன் தற்போது பாலிவுட்டில் அறிமுகம் ஆகி உள்ளார். இயக்குனர் பாவ் துலியா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தி ஃப்ரீலான்சர் (The Freelancer)’ என்ற வெப்சீரிஸ் ஒன்றில் உளவுத்துறை அதிகாரியாக ஜான் கொக்கன் நடிக்கிறார்.

துணிவு படப்பிடிப்பின் போது அஜித், ஜான் கொக்கனை பார்த்து நீங்கள் பாலிவுட்டில் விரைவில் நடிக்கப் போகிறீர்கள் என்று தெய்வ வாக்கு போல் கணித்து சொல்லியிருந்தார். அவர் சொன்னது போலவே  துணிவு படத்தை நடித்து முடித்த உடனேயே ஹிந்தி வெப் சீரிஸில் கையெழுத்திட்டேன் என்று ஜான் கொக்கன் மிகுந்த சந்தோஷத்துடன் கூறினார்.

Also Read: அஜித்தை ஒருமையில் கண்டபடி திட்டிய விஜயகாந்த்.. எதற்கும் அசராதவனாக இருந்து வென்று காட்டிய ஏகே.!

 அது மட்டுமல்ல அஜித் கூறியது போலவே நடந்து விட்டது. உச்ச  நாயகனாக இருக்கும் அஜித், தன்னுடன் நடிக்கும் சின்ன சின்ன நடிகர்களின் திறமையை கவனித்து அவர்களை ஊக்குவிக்கக் கூடியவர். அப்படித்தான் என்னை பார்த்தும் பாலிவுட் வரை செல்வீர்கள் என்று சொன்னது நிஜமாகிவிட்டது.

தி ஃப்ரீலான்சர் வெப் சீரிஸில் ‘அனுபம் கெர்’ போன்ற மூத்த பாலிவுட் நடிகர்களுடன் பணி புரியும் வாய்ப்பு இப்போது எனக்கு கிடைத்திருக்கிறது. அவருடன் காம்பினேஷன் காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக  ஜான் கொக்கன்  கூறியுள்ளார்.

Also Read: யானைக்கும் அடி சறுக்கும்.. விடாமுயற்சி தொடங்குமா? இல்லையா? மகிழ்திருமேனி போட்ட வைரல் பதிவு

Trending News