வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஜோதிகாவை தொடர்ந்து மறுப்பு தெரிவித்த சிம்ரன்.. கடைசியாக தளபதி 68 படத்திற்கு ஓகே சொன்ன நடிகை

Thalapathy 68: லோகேஷ்- விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் லியோ படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு பிறகு அடுத்ததாக விஜய்- வெங்கட் பிரபு கூட்டணியில் தளபதி 68 படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

பிகில் படத்தைப் போலவே விஜய் தளபதி 68 படத்தில் தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் தந்தையாக நடிக்க கூடிய விஜய் கேங்ஸ்டராகவும், மகனாக நடிக்க கூடிய விஜய் ரா ஏஜென்டிலும் வேலை பார்ப்பது போல் படத்தின் கதையை சித்தரித்துள்ளனர். இந்நிலையில் விஜய்யின் தந்தை கேரக்டருக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பதுதான் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த கதாபாத்திரத்தை ஜோதிகாவை மனதில் வைத்து தான் வெங்கட் பிரபு உருவாக்கினார்.

Also Read: கொஞ்சம் கூட கூச்சநாச்சமே இல்லாமல் ஜோதிகாவுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்.. தளபதி 68-ல் இருந்து விலகிய காரணம் இதுதான்!

ஆனால் ஜோதிகா அம்மா கேரக்டரில் நடிக்க முடியாது என அதில் நடிக்க மறுத்துவிட்டார். பின்பு பிரியமானவளே படத்தில் விஜய்யுடன் பக்காவாக கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன சிம்ரனை அணுகினர். வெங்கட் பிரபு சிம்ரனிடம் ‘நீங்க தான் அம்மா கதாபாத்திரம் நடித்திருக்கிறீர்களே, வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு அம்மாவா நடித்திருக்கிறீர்களே!’ என்று கூப்பிட்டு இருக்கிறார்.

ஆனால் சிம்ரனும் முடியாது என்று மறுத்துவிட்டார். அம்மா கதாபாத்திரத்துக்கு மட்டும் நான் வேண்டும். இப்போ வரைக்கும் உங்க கண்ணுக்கு நான் தெரியவில்லை’ என்று சிம்ரன் தளபதி 68 படத்தில் நடிக்க முடியாது என உறுதியாக சொல்லிவிட்டாராம். இவ்வாறு ஜோதிகாவை தொடர்ந்து சிம்ரனும் தளபதி 68 படத்தில் அம்மா கேரக்டரில் நடிக்க முடியாது என சொல்லிவிட்டனர். கடைசியாக செம ஹோம்லி லுக்கில் இருக்கும் நடிகை ஒருவர் இதில் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டார். இதனால் வெங்கட் பிரபுவும் செம ஹேப்பியாக இருக்கிறாராம்.

Also Read: முதல் நாள் முதல் காட்சியை பார்த்து அலப்பறை செய்த விஜய்.. வைரலாகிப் பரவும் புகைப்படம்

தளபதி 68 படத்தில் தந்தையாக நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக இப்பொழுது சிரிப்பழகி சினேகாவை புக் செய்து இருக்கிறார்கள். விஜய்- சினேகா இருவரும் ஏற்கனவே வசீகரா படத்தில் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்கள். இந்த ஜோடி தளபதி ரசிகர்களால் கொண்டாட்டப்பட்ட ஜோடி என்பதால் நிச்சயம் இது வொர்க் அவுட் ஆகும் என்ற நம்பிக்கையில் வெங்கட் பிரபு சினேகாவை புக் செய்திருக்கிறார்.

சமீப காலமாக சினேகாவும் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வருகிறார். அப்படி இருக்கும் போது இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்த ஜாக்பாட் போலவே பார்க்கிறார். அதை தவிர சிம்ரன், ஜோதிகா சொன்னது போல் அம்மா கேரக்டரில் நடித்தால் தப்பாகிவிடும் என்ற கண்ணோட்டத்தில் சினேகா இதை துளி கூட யோசிக்கவில்லை. நிச்சயம் சினேகாவிற்கு இந்த படத்தின் மூலம் நல்ல ஒரு கம்பக் கொடுக்கப் போகிறார்.

Also Read: நான் அவ்வளவு திறமையான ஆள் கிடையாது.. லியோ படத்தை மறுத்ததற்கு விஷால் கூறிய மொக்க காரணம்

Trending News