திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பொம்பள சோக்கு கேக்குதா, சிலுக்கா?. குஜாலாக வந்திருக்கும் மார்க் ஆண்டனி ட்ரைலர்

Mark Antony Trailer: நடிகர் விஷால் பெரிதும் நம்பி இருக்கும் படம் தான் மார்க் ஆண்டனி. சமீப காலமாக ஹிட் படங்கள் கொடுக்காத விஷாலுக்கு கடைசியாக வெளியான லத்தி படம் ஓரளவு வரவேற்பை கொடுத்தது. இதைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா காம்போவில் உருவாகி இருக்கும் படம் தான் மார்க் ஆண்டனி.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்த நிலையில் பின்னணி குரல் நடிகர் கார்த்தி கொடுத்திருக்கிறார். நேற்றைய தினம் மார்க் ஆண்டனி படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Also Read : நான் அவ்வளவு திறமையான ஆள் கிடையாது.. லியோ படத்தை மறுத்ததற்கு விஷால் கூறிய மொக்க காரணம்

இந்த சூழலில் தாமிரபரணி படத்தில் எப்படி நான் கெட்டவன் என்று விஷால் கூறுவாரோ அதே போல் மார்க் ஆண்டனி படத்தில், நான் வில்லன் எப்போதுமே வில்லனாக இருப்பேன் என மாஸ் டயலாக்கை வெளியிட்டு இருக்கிறார். மேலும் கேங்ஸ்டர் கதையை கொண்டிருக்கும் இப்படம் அதிலும் சில நியாயமான விஷயங்களை கடைப்பிடிக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக பெண்கள் விஷயத்தில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்கக்கூடியவர்கள். மேலும் அந்த ரவுடி கேங்கில் ஒருவரை பொம்பள சோக்கு கேக்குதா என எஸ்ஜே சூர்யா சுட்டுக் கொல்கிறார். மேலும் 80’s நடிகை சில்க் ஸ்மிதா அப்போது உள்ளது போல் மார்க் ஆண்டனி ட்ரைலரில் இடம் பெற்றிருக்கிறார்.

Also Read : நெருப்பாய் இருக்கும் கோபத்தை வெளியில் காட்டாத விஷால்.. பொதுவெளியில் இருவரும் காட்டாத முகம்

இதைப் பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். மேலும் மார்க் ஆண்டனி படம் டைம் டிராவல் கதை அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ட்ரைலர் முழுக்க முழுக்க காமெடி கலந்து வெளியாகி உள்ளதால் விஷாலுக்கு கண்டிப்பாக கம்பேக் கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Trending News