ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

வசூல் வேட்டையாடும் குஷி.. வாயை பிளக்க வைத்த 3 நாள் வசூல் ரிப்போர்ட்

Kushi Collection Report: விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் கெமிஸ்ட்ரியில் கடந்த வாரம் வெளியான குஷி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே அவ்வப்போது வெளிவந்த ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் பலரையும் சுண்டி இழுத்தது.

அதேபோல் படத்தில் இருந்து வெளியான பாடல்கள், ட்ரெய்லர், ப்ரமோஷன் என அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதற்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் வெளிவந்துள்ள குஷி ஒட்டுமொத்த இளைஞர்களையும் கவர்ந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

Also read: Kushi Movie Review- மூச்சு முட்ட காதலிக்கும் விஜய் தேவரகொண்டா-சமந்தா.. குஷி எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

அதிலும் விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் கெமிஸ்ட்ரி படத்தின் வெற்றிக்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருக்கிறது. அந்த வகையில் முதல் நாளிலேயே இப்படத்திற்கு எதிர்பார்த்ததற்கும் மேலான வரவேற்பும், பாசிட்டிவ் விமர்சனங்களும் குவிந்தது.

மேலும் படம் மணிரத்தினத்தின் அலைபாயுதே போன்ற ஸ்டைலில் இருக்கிறது என்ற விமர்சனங்கள் வந்தாலும் ரசிக்கும் படியாகவே இருக்கிறது. அதிலும் மூச்சு முட்ட காதல் செய்யும் ஹீரோ, ஹீரோயினை பார்க்கும் போது குட் ஃபீல் இருக்கிறது என சில ரசிகர்கள் கூறி வந்தனர்.

Also read: உப்பு சப்பு இல்ல, கோவில் கோவிலா போனா மட்டும் படம் ஓடுமா.? விஜய், சமந்தாவின் குஷியை பஞ்சர் செய்த ப்ளூ சட்டை மாறன்

அதனாலேயே படத்தின் வசூல் லாபகரமாகவே அமைந்தது. அந்த வகையில் படம் வெளியான இந்த மூன்று நாட்களில் உலக அளவில் கிட்டத்தட்ட 70 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. இதை தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

இது நிச்சயம் விஜய் தேவரகொண்டாவிற்கு ஒரு சரியான கம் பேக் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதற்கு முன்பு வெளியான லிகர் படுதோல்வி அடைந்த நிலையில் இந்த குஷி அவரை உண்மையிலேயே குஷிப்படுத்தி விட்டது. இனிவரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also read: ஜெயிலர் வேகத்தை குறைத்த குஷி.. முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்

Trending News