செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஜோதிகா எல்லாம் ஒண்ணுமே இல்ல, கங்கனாவுக்கு லாரன்ஸ் மாஸ்டர் போட்ட சோப்பு.. நச் பதிலடி கொடுத்த ஜோ

Actress Jyotika: பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் சந்திரமுகி 2 வரும் 15ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியான நிலையில் தற்போது பட குழுவினர் ப்ரமோஷன் செய்யும் வேலையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தன்னை பற்றி மோசமாக விமர்சித்திருந்த ராகவா லாரன்சுக்கு ஜோதிகா நச்சென்ற ஒரு பதிலடியை கொடுத்து நோஸ்கட் செய்திருக்கிறார். அதாவது மாஸ்டர் சமீபத்தில் சந்திரமுகி கதாபாத்திரம் குறித்து ஒரு சர்ச்சையான கருத்தை வெளியிட்டு இருந்தார்.

Also read: ஜோதிகா சிம்ரன் செய்த அலப்பறையால் டீலில் விட்ட வெங்கட்பிரபு… தளபதி 68 படத்திற்காக இளவரசியிடம் சரணடைந்த சம்பவம்

அதாவது ஜோதிகா ஒரிஜினல் சந்திரமுகி கிடையாது. அவர் அந்த கேரக்டர் போல் நடித்தார். ஆனால் கங்கனா தான் சந்திரமுகியாகவே நடிக்கிறார். இருவரையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் கடுப்பான ஜோவின் ரசிகர்கள் கங்கனாவுக்கு ஜால்ரா தட்டாதீர்கள் என லாரன்ஸை திட்டி தீர்த்தனர்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஜோதிகா சந்திரமுகி 2 டீமுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை கூறி நான் ஒரு பெரிய மனுஷி என்று நிரூபித்து இருக்கிறார். தன் சோசியல் மீடியா பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, கங்கனா இந்த கதாபாத்திரத்தில் நடித்ததை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.

Also read: ஜோதிகாவை மட்டம் தட்டி கங்கனாவுக்கு அடித்த ஜால்ரா.. வேட்டையனாக செட்டாகாத மாஸ்டர் பற்ற வைத்த நெருப்பு

அவருடைய நடிப்பை படத்தில் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் வாசு மற்றும் ராகவா மாஸ்டர் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் அவர் அதில் தெரிவித்திருக்கிறார். இதுதான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

என்னதான் கங்கனாவை உயர்த்தி வைத்து ஜோதிகாவை லாரன்ஸ் மட்டம் தட்டி இருந்தாலும் அதை பெரிது படுத்தாமல் இப்படி ஒரு பதிவை அவர் போட்டிருப்பது பாராட்டையும் பெற்று வருகிறது. இனிமேலாவது மாஸ்டர் எப்படி பேச வேண்டும் என்பதை புரிந்து கொண்டால் நல்லது.

jyothika-tweet
jyothika-tweet

 

Trending News