லியோ படத்தை மண்ணோடு புதைக்க திட்டம்போடும் உதயநிதி.. ரெட் ஜெயிண்ட்டை வைத்து விஜய்க்கு எதிராக எடுக்கும் முடிவு

Actor Vijay: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் வரும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி குறித்த அப்டேட்டுகள், படத்தில் நடித்துள்ள பிரபலங்கள் படத்தை பற்றி கூறும் விஷயங்கள் உள்ளிட்டவை சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படம் ரிலீசானால் கண்டிப்பாக ரஜினியின் ஜெயிலர் பட வசூலையே தாண்டி 1000 கோடிக்கு மேல் வசூலாகும் என கூறப்பட்டு வருகிறது.

இதனிடையே உதயநிதி ஸ்டாலினால் இந்த படம் 500 கோடியை கூட தாண்ட முடியாத அளவுக்கு விஜய் மாட்டிக் கொண்டுள்ளார். லியோ படத்தின் வெற்றியை பொறுத்து தான் இப்படத்தில் நடித்துள்ள அத்தனை பிரபலங்களின் வாய்ப்புகளும் அடுத்தடுத்து உள்ளது. ஆனால் லியோ படத்தை திரையரங்குகளில் வெளியிட உதயநிதி பல சூழ்ச்சிகளை செய்து வருகிறாராம்.

இதற்கான காரணம் அண்மைக்காலமாக விஜய் அரசியல் பேச்சை எடுத்ததிலிருந்து விஜய்க்கும், உதயநிதிக்கும் சரியான பேச்சுவார்த்தை இல்லாமல் உள்ளது. இதை கருத்தில் கொண்டு விஜய்யை அரசியலில் மட்டுமில்லாமல் அவரை சினிமாவிலும் வளரவிட கூடாது என்பதில் உதயநிதி தெளிவாக இருக்கிறாராம். தற்போது விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு அடித்தளமாக லியோ படம் உள்ளதால் இப்படத்தின் வெற்றியை வைத்தே விஜய் அரசியலிலும் தனது பெயரை வாங்கி விடுவார்.

இதை கருத்தில் கொண்டு லியோ படத்துக்கு திரையரங்குகளை கொடுக்காமல் வேறொரு படத்துக்கு பல திரையரங்குகளை கொடுக்க உதயநிதி ஸ்டாலின் திட்டம் போட்டுள்ளார். அண்மைக் காலமாக முன்னணி நடிகர்களின் படங்களை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் மூலமாக திரையரங்குகளுக்கு விநியோகம் செய்து வருகிறார்.

இதனிடையே லியோ படத்தை தயாரிப்பாளர் லலித் குமார் திரையரங்குகளுக்கு விநியோகம் செய்யவுள்ள நிலையில், உதயநிதியை மீறி லியோ படத்துக்கான திரையரங்கு எண்ணிக்கையை அதிகரிப்பது சாத்தியம் கிடையாது. இதேபோல தான் விஜய்யின் முந்தைய படமான வாரிசு படத்தை தயாரிப்பாளர் லலித்குமார் விநியோகம் செய்த நிலையில், துணிவு திரைப்படத்தை காட்டிலும் மிக குறைவான திரையரங்குகள் கிடைத்து, வாரிசு படத்தின் வசூல் பயங்கராக பாதிக்கப்பட்டது.

இருப்பினும் சில மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் வாரிசு படத்தை உதயநிதி தான் விநியோகம் செய்தார். அப்படியிருந்தும் கம்மியான திரையரங்குதான் வாரிசு படத்துக்கு கிடைத்தது. இதனிடையே வாரிசு படத்தை போலவே லியோ படத்துக்கு தியேட்டரை கம்மிப் பண்ண விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தை லியோ படத்துடன் வெளியிட்டு, இப்படத்துக்கு திரையரங்கு இல்லை என கணக்கு காட்ட உதயநிதி திட்டம் போட்டுள்ளாராம்.