திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினியை குளிர வைத்த கலாநிதி மாறன்.. பண மழையில் நனையும் சூப்பர் ஸ்டார்

Rajinikanth – Kalanidhi Maaran: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. ரஜினிக்கு கடந்த சில வருடங்களாகவே சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மிகப்பெரிய ஹிட் படம் என்று எதுவும் இல்லை. ரிலீசான படங்கள் அத்தனையும் பொருளாதார ரீதியாக கை கொடுத்தாலும் வசூலை வெளியில் சொல்லும் அளவிற்கு அபாரமாக இல்லை. ரஜினி எப்படியாவது ஒரு இண்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்து விட வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

சூப்பர் ஸ்டார், இயக்குனர் நெல்சன் திலீப்குமார், சன் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவான ஜெயிலர் படம் ரஜினியின் இந்த கனவை நிறைவேற்றி இருக்கிறது. ரஜினி மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எதிர்பார்த்த வெற்றியை விட தற்போது இந்த படம் பல மடங்கு வசூல் சாதனை செய்திருக்கிறது. இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.

Also Read:ரஜினி போல் மறக்கடிக்கப்பட்ட சொந்த பெயர்.. மம்மூட்டியின் நிஜ பெயர் இதுதான்

மொத்த பட குழுவும் இந்த வெற்றியை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். அதே நேரத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன் நேற்று, சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்திருக்கிறார். மேலும் ஜெயிலர் படத்தின் வெற்றி பரிசாக ரஜினிக்கு காசோலை ஒன்றை கொடுத்திருக்கிறார். தற்போது இந்த தகவல் தான் சமூக வலைத்தளத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

கலாநிதி மாறன், ரஜினிக்கு சுமார் 110 கோடிக்கு செக் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. வசூலின் ஒரு பங்கை ரஜினியின் சம்பளமாக கலாநிதி கொடுத்திருக்கிறார். ஏற்கனவே பட ரிலீஸ் இருக்கு முன்பு இந்த படத்தின் சம்பளமாக ரஜினிக்கு 100 கோடி கொடுக்கப்பட்டது. தற்போது 210 கோடியாக உயர்ந்திருக்கிறது.

Also Read:ஜெயிலர் ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய முன்னணி நிறுவனம்.. 600 கோடி வசூலை பார்த்ததும் ஜர்க் அடிச்ச சன் பிக்சர்ஸ்

இதன் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்காக சம்பளமாக பெற்ற தொகை 210 கோடியாகும். ஏற்கனவே இந்த படத்தின் வசூல் விக்ரம் படத்தின் வசூலை தாண்டி தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறது. விரைவில் ஜெயிலர் படம் பொன்னியின் செல்வன் படத்தின் வசூலையும் தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் தற்போது ரஜினியின் சம்பளத் தொகையை கலாநிதி மாறன் உயர்த்தி இருப்பதால், தமிழ்நாட்டில் 210 கோடி சம்பளமாக பெற்று, அதிக சம்பளம் பெறும் ஹீரோக்களின் வரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு வந்துவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தன்னுடைய 72 வது வயதில் ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினி மறுபடியும் கம் பேக் கொடுத்து இருக்கிறார்.

Also Read:ரஜினி, விஜய் ரசிகர்களை குதூகல படுத்திய ஷாருக்கான்.. ஜவான் மேடையை தெறிக்க விட்ட சூப்பர் ஸ்டார்

Trending News