திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கலாநிதி BMW கார் கொடுத்ததன் பின்னணி என்ன தெரியுமா? சன் பிக்சர்ஸ் போட்டுள்ள ஸ்கெட்ச்

Kalanithi Maran,Rajini: இன்று கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் விஷயம் என்னவென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன் பிஎம்டபிள்யூ காரை பரிசாக கொடுத்தது தான். கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி நெல்சன் இயக்கத்தில் ரஜினி மற்றும் பல பிரபலங்கள் நடிப்பில் ஜெயிலர் படம் வெளியாகி இருந்தது.

இதுவரை எந்த படமும் தமிழ் சினிமாவில் வசூல் செய்யாத அளவுக்கு ஜெயிலர் படம் கலெக்ஷனை அள்ளி சாதனை படைத்தது. இதனால் படக்குழு மிகுந்த சந்தோஷத்தில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடி இருந்தனர். இதனால் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் லாபத்தில் தனது பங்கான 100 கோடியை ரஜினிக்கு கலாநிதி மாறன் கொடுத்திருந்தார்.

Also Read : வீட்டு வாசலில் ரஜினிக்கு காத்திருந்த காஸ்ட்லி கிஃப்ட்.. சர்ப்ரைஸ் கொடுத்த கலாநிதி மாறன், தலை சுற்ற வைக்கும் விலை

அதுபோக நேரடியாக ரஜினியின் இல்லத்திற்கே சென்று BMW X7 காரை பரிசாக வழங்கி இருந்தார். படத்தின் இயக்குனர் ஆன நெல்சனுக்கு சன் பிக்சர்ஸ் எதுவும் கொடுக்காத நிலையில் ரஜினிக்கு மட்டும் இவ்வாறு பரிசை வாரி வழங்க பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. அதாவது கலாநிதி மாறன் ரஜினியிடம் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறாராம்.

இப்போது ரஜினி அடுத்ததாக தலைவர் 170 படத்தில் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது கடைசி படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறாராம். ஆனால் கலாநிதி மாறன் லோகேஷ் படத்திற்கு பிறகு எங்களது நிறுவனம் சார்பாக ஒரு படம் பண்ண வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

Also Read : சும்மா இருக்கும் விஜய்யை சொறிஞ்சு விடும் கலாநிதி மாறன்.. ரஜினியை வச்சு வெறுப்பேற்றிய சம்பவம்

ஏனென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கடைசி படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் ஜெயிலர் படமே நல்ல வசூலை வாரி குவித்த நிலையில் மீண்டும் ரஜினியுடன் இணைய வேண்டும் என்று விருப்பத்தை வைத்துள்ளனர்.

இப்போதைக்கு ரஜினி எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது தெரிகிறது. ஆனால் கலாநிதி மாறனுக்காக கண்டிப்பாக ரஜினி சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு இன்னொரு படம் பண்ணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் கொடுத்த வெற்றியால் சன் பிக்சர்ஸ் புது உத்வேகத்துடன செயல்பட தொடங்கி இருக்கிறது.

Also Read : ரஜினியை குளிர வைத்த கலாநிதி மாறன்.. பண மழையில் நனையும் சூப்பர் ஸ்டார்

Trending News