லியோவை விட பல மடங்கு பில்டப்புடன் வெளியான ரஜினியின் படம்.. கடைசியில் மண்ணை கவியது தான் மிச்சம்

Leo Movie: பெரும்பாலும் இப்போது டாப் நடிகர்களின் படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் படம் தான் லியோ. லோகேஷ் இயக்கத்தில் விஜய் மற்றும் திரிஷா ஆகியோர் நடிப்பில் இந்த படம் உருவாகி இருக்கிறது. வருகின்ற அக்டோபர் மாதம் இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி ஒரு ஹைப் எந்த படத்திற்கும் இல்லாத நிலையில் லியோ படத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்திற்கு கூட இவ்வளவு எதிர்பார்ப்பு இல்லை. ஆனாலும் ஜெயிலர் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் சாதனை படைத்தது.

ஆனால் லியோ படத்தை போல் ரஜினியின் ஒரு படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பு கடைசியில் ஏமாற்றம் கொடுத்ததால் ரசிகர்கள் மிகுந்த கவலை கொண்டனர். அதாவது 2002 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி தயாரிப்பில் வெளியான படம் தான் பாபா.

இப்போது லியோ படம் எப்படி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் உறுதியாக இருக்கிறார்களோ அதைவிட அதிகமாக பாபா படம் நிச்சயம் வசூல் செய்யும் என ரசிகர்கள் நம்பினர். இவ்வாறு ஓவர் பில்டப் கொடுத்த நிலையில் கடைசியில் படம் மொக்கை வாங்கியது. இப்படம் போட்ட பட்ஜெட்டை கூட எடுக்க முடியாமல் வெறும் நஷ்டத்தை சந்தித்தது.

இந்த படம் வெளியாவதற்கு முன்பே பத்திரிகையாளர்களிடம் பாபா என்று சொன்னாலே கோடிக்கணக்கில் வியாபாரம் ஆகும் என்று அடித்து சொல்வார்கள். இவ்வாறு பாபா படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததே ஆபத்தாக முடிந்து விட்டது. கடைசியில் படமும் மண்ணை கவ்வியதுதான் மிச்சம்.

பாபா படத்தைப் போல தான் லியோ படத்திற்கும் ரசிகர்கள் எதிர்பார்ப்பை ஏற்றி விட்டிருக்கின்றனர். இப்போதே படம் ஆயிரம் கோடி வசூலை தாண்டும் என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள். படம் ரிலீசுக்கு முன்பே இவ்வாறு உறுதியாக இருப்பது ஒரு விதத்தில் ஆபத்தாக முடியவும் வாய்ப்பு இருக்கிறது. லியோ படம் வெளியானால் தான் என்ன நிலைமை என்று தெரியவரும்.