வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கிக் திரைப்படத்தால், சந்தானத்திற்கு மானக்கேடு.. அவமானத்தை வெளிச்சம் போட்டு காட்டிய ப்ளூ சட்டை

Actor Santhanam: சந்தானம் காமெடி ட்ராக்கில் இருந்து ஹீரோவாக மாறியதில் இவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மவுசும் குறைந்துவிட்டது. இவர் நடித்த படங்கள் சொல்லும் படி மக்களிடம் எடுபடவில்லை. அதனால் இனி காமெடியனாகவே போய்விடலாம் என்று முடிவுக்கு வந்திருந்தார். அந்த நிலையில் இவர் கடைசியாக நடித்த டிடி ரிட்டன்ஸ் படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

அத்துடன் சில திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாகவும் இப்படம் ஓடிக்கொண்டு வெற்றியை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து அடுத்த படமான கிக் திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது.
இப்படத்தை இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கி இருக்கிறார். பொதுவாக சந்தானம் படம் காமெடிக்கு பஞ்சமே இருக்காது.

Also read: ராஜேஷ் இயக்கத்தில் ஹீரோக்கு இணையாக சந்தானம் நடித்த 5 படங்கள்.. தேனடையை விடாமல் துரத்திய பார்த்தா

அந்த வகையில் இப்படம் காமெடி கலாட்டா நிறைந்த படமாகவும், எப்படியாவது தில்லாலங்கடி வேலை செய்தாவது நிறைய காசு சம்பாதித்து விட வேண்டும் என்று நோக்கில் இந்த கதை நகரும்.
இவருக்கு எதிர் மாறாக நேர்மையான முறையில் சம்பாதித்து வேலை பார்த்து வருகிறார் ஹீரோயின் தன்யா. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறி ரகளையுடன் முடிகிறது.

ஆனால் இந்த படம் டிடி ரிட்டன்ஸ் அளவுக்கு காமெடி சரவெடியாக வெடிக்கவில்லை என்பதுதான் கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. ஆனாலும் இவரை ஹீரோவாக கொண்டாடுவதற்கு ரசிகர்கள் கூட்டமே ஒரு பக்கம் இருந்து வருகிறார்கள். அவர்கள் தியேட்டர்களில் செய்த அலப்பறை தான் கொஞ்சம் ஓவராக இருக்கிறது.

Also read: ஹாலிவுட் படத்தை காப்பி அடித்த சந்தானம்.. ஆதாரத்தோடு சிக்கிய டிடி ரிட்டன்ஸ் இயக்குனர்

அதாவது முன்னணி நடிகர்கள் படம் வருகிறது என்றால் அவர்களுடைய பேனருக்கு பால் ஊற்றி, மாலை அணிவித்து ஆரவாரப்படுத்தி வருவார்கள். அதே மாதிரி நேற்று தியேட்டர் முன் வைக்கப்பட்ட சந்தானத்தின் பேனரில் வழக்கத்துக்கு மாறாக ரசிகர்கள் பீர் ஊற்றி வந்தார்கள்.

இந்த விஷயத்தை பார்க்கும்போது பலரும் சமுகம் எந்த அளவுக்கு இளைஞர்களால் சீரழிகிறது என்பதற்கு உதாரணம் இந்த மாதிரி மானங்கெட்ட வேலை செய்யும் போது தான் தெரிகிறது என புலம்பி தலையில் அடித்துக் கொண்டு வெளியே வருகிறார்கள். இந்த அவமானத்தை ப்ளூ சட்டை மாறன் இவரது ட்விட்டர் அக்கவுண்டில் வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார்.

Also read: பேராசையில் 10 பைசா வாங்காமல் நடித்துக் கொடுத்த சந்தானம்.. தயாரிப்பாளர்களை வச்சு செய்யும் சம்பவம்

Trending News