Baakiyalakshi Serial: விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இப்போது எதிர்பார்க்காத பல விருப்பங்கள் அரங்கேறி இருக்கிறது. அதன்படி காத்து வாக்குல ரெண்டு காதல் போல கோபி, ராதிகா, அமிர்தா என இத்தொடரில் பலருக்கு இரண்டாவது திருமணம் நடந்தது. சக்காளத்தி சண்டையை விட இப்போது மோசமாக போய்க் கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் பாக்யா மற்றும் ராதிகா இடையே சக்காளத்தி பிரச்சனை தான் நடந்து கொண்டிருந்தது. அடுத்ததாக அமிர்தாவின் கணவர் ஒரு விபத்தில் உயிரிழந்த நிலையில் தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். எழிலுடன் பழக ஆரம்பித்த நிலையில் இவர்கள் இடையே காதல் மலர்ந்து குடும்பத்தை சமாதானம் செய்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இப்போது தான் எழில் மற்றும் அமிர்தா இடையே ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெற்று வருகிறது. அதற்குள் என்னவென்றால் அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் எதிர்பாராத விதமாக உயிர் தப்பி வந்து விடுகிறார். இதனால் கணேஷ் பெற்றோர் மகிழ்ச்சியில் இருந்தாலும் ஒருபுறம் அமிர்தாவின் விஷயம் தெரிந்தால் என்ன நடக்கும் என்ற பதட்டத்தில் இருக்கின்றனர்.
ஆகையால் அமிர்தா தொலைந்து போய்விட்டார் என்று கணேஷ்க்கு கட்டுக்கதை சொல்லி இருக்கிறார்கள். இதை நம்பிய கணேஷ் எடுத்து போனை பார்க்கும் போது அதில் அமிர்தா மற்றும் அவருடைய குழந்தை நிலா இருப்பது தென்படுகிறது. இதனால் தனது பெற்றோரிடம் இது யார் என்று கணேஷ் நச்சரிக்க அவருடைய குழந்தை தான் என்பதை போட்டு உடைத்து விடுகிறார்கள்.
மேலும் கணேஷின் தந்தை அமிர்தா மற்றும் நிலா இருவரும் சென்னையில் தான் இருக்கிறார்கள் என்ற உண்மையை கூறிவிடுகிறார். ஏற்கனவே அமிர்தாவின் கனவில் கணேஷ் வந்ததால் மனக்குழப்பத்தில் அவர் இருந்து வர எழில் ஆறுதல் கூறியிருந்தார். இப்போது நிஜமாகவே அமிர்தாவின் முன்னாள் கணேஷ் வர இருக்கிறார்.
இதனால் தனது குழந்தைக்காக கணேஷ் உடன் செல்ல அமிர்தா முடிவெடுக்கிறாரா என்ற குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே எழில் பல சிக்கல்களை தாண்டி வரும் நிலையில் அவரது தலையில் இடியை இறக்கும்படியாக இந்த சம்பவம் அரங்கேற இருக்கிறது. ஆகையால் பாக்கியலட்சுமி தொடரில் இனி வரும் எபிசோடுகளில் பல ட்விஸ்ட் வர இருக்கிறது.