செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

40 வயதிலும் ஹீரோயினாக ஜொலிக்கும் திரிஷாவின் 5 படங்கள்.. உச்சத்தில் இருக்கும் ஹீரோக்களை வளைத்துப் போட்ட குந்தவை

Trisha: திரிஷா தன்னுடைய 40 வயதை தாண்டிய நிலையிலும் ஹீரோயினாக தற்போது வரை ஜொலித்துக் கொண்டே இருக்கிறார். அதிலும் இடைப்பட்ட காலங்களில் இவருடைய மார்க்கெட் ரொம்பவே குறைந்து தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் அக்கட தேசத்துக்கு போய்விட்டார். அதன் பின் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக கம்பேக் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை மறுபடியும் தன்வசம் இழுத்துக் கொண்டார்.

அப்படிப்பட்ட இவரிடம் தற்போது கைவசம் எக்கச்சக்கமான படங்கள் இருக்கிறது. அந்த வகையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார் தி ரோடு என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்திலும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

Also read: சித்தார்த்தின் டேட்டிங் வலையில் சிக்கி 5 நடிகைகள்.. கல்யாண ஆசையையே வெறுக்க வைத்த திரிஷாவின் உறவு

அத்துடன் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் விடாமுயற்சி படத்திலும் இவர் தான் ஜோடியாக நடிக்கப் போகிறார். அந்த வகையில் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு மறுபடியும் இவர்கள் ஒன்று சேர்ந்து நடிக்கப் போகும் படம் தான் விடாமுயற்சி. அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்க உள்ள KH234 படத்திலும் திரிஷா தான் நடிக்க இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் தலைவர் 171 படத்திலும் ஹீரோயினாக த்ரிஷா தான் நடிக்கப் போகிறார். இப்படி தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு தன்னுடைய 40 வயதிலும் ஜொலித்துக் கொண்டிருக்கும் ஒரே ஹீரோயின் யார் என்றால் கண்டிப்பாக இவராகத்தான் இருக்க முடியும். அந்த அளவிற்கு நிற்கக்கூட நேரமில்லாமல் பிசியாக பட வாய்ப்பு தன்வசம் தக்க வைத்துக் கொண்டு வருகிறார்.

Also read: திருட்டுத்தனமாக அறையில் வைக்கப்பட்ட கேமரா.. திரிஷா போல் சிக்காமல் எஸ்கேப்பான நடிகை

அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த சதுரங்க வேட்டை சூப்பர் டூப்பர் ஹிட் படமாக வெற்றி கொடுத்தது. அந்த வகையில் மறுபடியும் இப்படத்தின் இரண்டாம் பாக்கத்தை எடுக்க தயாராக இருக்கிறார்கள். இதிலும் திரிஷா தான் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் ராம் படத்திலும் இவர் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஐடென்டி என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இப்படி உச்சத்தில் இருக்கும் அனைத்து நடிகர்களையும் குந்தவை கேரக்டரில் நடித்ததன் மூலம் அனைவரது கவனத்தையும் இவர் பக்கம் திருப்பிக் கொண்டார்.

Also read: திரிஷா போல் வில்லியாக மாறிய ஜோதிகா.. கொடி பட சாயலில் உருவாகும் தளபதி-68

Trending News