உப்புக்கு சப்பாக மாறிப்போன எதிர்நீச்சல்.. கதையே இல்லாமல் வெறும் வாய் சவடால் வைத்து உருட்டும் ஜீவானந்தம்

Ethirneechal Serial: கடந்த இரண்டு வருட காலங்களாக சீரியல்களில் கெத்தாக சிம்ம சொப்பனத்தில் ஒய்யாரமாக இருந்து ரசிகர்களின் மனதை கவர்ந்து வந்தது எதிர்நீச்சல் சீரியல். ஆனால் கடைசியாக வந்த இரண்டு எபிசோடுகளுமே பெருசாக சொல்லும்படி இல்லாமல் உப்புக்கு சப்பாக கதை அமைந்து வருகிறது. அத்துடன் பார்ப்பதற்கும் அந்த அளவிற்கு சுவாரஸ்யம் இல்லை.

அந்த வகையில் நேற்று நந்தினி, வீட்டிற்கு தெரியாமல் கேண்டின் ஆர்டரை வெற்றிகரமாக முடித்துவிட்டு பணத்தை சம்பாதிக்கிறார். இந்த சந்தோஷத்தை முதலில் இவருடைய அப்பா அம்மாவிடம் சொல்லி ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று நந்தினி, ஜனனி மற்றும் சக்தி அனைவரும் வீட்டிற்கு போகிறார்கள்.

போனதும் சம்பாதித்த பணத்திலிருந்து பாதி தொகையை எடுத்து அம்மாவிடம் கொடுத்து இது உன் மகள் முதன் முதலாக சம்பாதித்த காசு அதை உன்னிடம் கொடுக்க தான் ஓடோடி வந்தேன் என்று சொல்லிக் கொடுக்கிறார். உடனே அவர்களும் பெற்ற மனது பூரித்து விட்டது என்று சந்தோஷப்படுகிறார்கள்.

அடுத்தபடியாக ரேணுகாவிடம் பரதநாட்டியம் கற்றுக் கொள்வதற்காக வீட்டிற்கே டீச்சர் மாணவர்களை கூட்டி வந்து விடுகிறார். அப்பொழுது வீட்டில் இருக்கும் மற்றவர்களை சமாளித்து அவர்களுக்கு பரதநாட்டியம் சொல்லி அனுப்பி வைக்கிறார். இதை கேள்வி கேட்ட ஞானம் மற்றும் கரிகாலனிடம் பொய் சொல்லி சமாளித்து விடுகிறார்.

இதனை தொடர்ந்து ஈஸ்வரிக்கும் கல்லூரியில் இருந்து போன் பண்ணி பேசுவதற்கு வர சொல்லி விடுகிறார்கள். இவரும் அவருடைய மகனை அழைத்துக் கொண்டு இவர் பங்குக்கு வெற்றியைத் தேட போய்விட்டார். ஆக மொத்தத்தில் மருமகள்கள் அனைவரும் முன்னுக்கு வந்து விட்டார்கள். இதற்கிடையில் குணசேகரன் இல்லாததால் அவர் பெயரை மட்டும் வைத்து அனைவரும் நாடகத்தை கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் குணசேகரனின் அம்மா பெரியவனை எங்க என்று கேட்க, அதற்கு ஞானம் தலைவலி என்று ரூம்குள் தூங்கிக் கொண்டிருக்கிறார் என சொல்லிவிடுகிறார். ஏதோ நாடகத்தை சுவாரஸ்யமே இல்லாமல் கொண்டு போவது போல் தெரிகிறது. கூடிய விரைவில் குணசேகரன் இடத்தை தகுந்த ஆள் வந்து நிரப்பினால் மட்டுமே ஓரளவுக்கு எதிர்நீச்சல் சீரியல் தாக்கு பிடிக்கும். இல்லையென்றால் மற்ற சீரியல்கள் போல பத்தில் ஒன்றாக மாறிவிட வாய்ப்பு இருக்கிறது. எந்த மாதிரி குணசேகரனை கூட்டிட்டு வந்து இந்த நாடகத்துக்கு உயிர் ஊட்டுகிறார்கள் என்று பார்க்கலாம்.