Baakhiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இப்போது பாக்யாவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த தொடரின் கதாநாயகியாக இருக்கும் பாக்யா அடுத்தடுத்த பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறார். அந்த வகையில் இப்போது ராதிகாவால் அவரது அஸ்திவாரத்திற்கு பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
அதாவது ஆரம்பத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்த பாக்யா இப்போது திருமண ஆர்டர் மற்றும் கேன்டீன் பிசினஸ் செய்து வருகிறார். அதுவும் ராதிகா வேலை பார்க்கும் அலுவலகத்தில் தான் கேன்டீன் ஆர்டர் எடுத்திருக்கிறார். இதில் ராதிகாவுக்கு மேல் இடத்தில் உள்ள அதிகாரி வேலை விஷயமாக வெளியூர் செல்ல இருக்கிறார்.
Also Read : பாக்யாவை காலி பண்ண நினைக்கும் திருட்டு கோபி.. எழிலிடம் கையும் களவுமாய் மாட்டிய ராதிகாவின் கணவர்
இதனால் ஆபீஸில் உள்ள அனைத்து நிர்வாகமும் ராதிகா கைவசம் போகிறது. அவரே எந்த முடிவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளும் என அதிகாரம் கொடுக்கப்படுகிறது. இதை தனக்கு சாதகமாக ராதிகா பயன்படுத்திக் கொள்கிறார். அதாவது ஒரு கேன்டீன் ஆர்டர் ஏழு மாதங்களில் முடிவு பெரும்.
அதன் பிறகு அவர்கள் சிறப்பாக செய்தால் தொடரலாம். ஆனால் ராதிகா ஏழு மாத காண்ட்ராக்ட் முடிந்தவுடன் இப்போது பாக்யாவை கேன்டீனை விட்டு வெளியேற சொல்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாக்யா நிலைகுலைந்து போகிறார். மேலும் ஒருமுறை ராதிகாவிடம் பேசிப்பார்க்கலாம் என்ற முடிவுக்கு வருகிறார்.
Also Read : இந்த சீசனில் விஜய் டிவி இறக்கிவிடும் வாரிசு.. மொத்த லிஸ்டையும் பார்த்தா டிஆர்பி-கே பஞ்சம் இருக்காது போலையே
மற்றொருபுறம் பழனிச்சாமி பாக்யாவுக்கு ஒவ்வொரு முறையும் உதவி செய்து வருவது கோபிக்கு எரிச்சல் அடைகிறது. இதனால் நேரடியாகவே பழனிச்சாமி வீட்டுக்குச் சென்று பாக்யாவுடன் பழகுவதை நிறுத்திக் கொள்ளும்படி அடாவடியாக பேசுகிறார். ஆனால் பழனிச்சாமி மிகவும் பொறுமையாக எல்லா விஷயங்களையும் கூறி வருகிறார்.
ஆனால் கோபியின் ஆட்டம் அதிகரிக்க பழனிச்சாமியின் அம்மா இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என ஆவேசமாக பேசுகிறார். பாக்யாவும், பழனிச்சாமியும் திருமணம் தான் செய்து கொள்ளப் போகிறார்கள் உங்களால் என்ன செய்ய முடியும் என்பது போல வாய் அடைக்க வைத்து விடுகிறார். ஆனால் பழனிச்சாமி, பாக்கியாவும் நானும் சிறந்த நட்புடன் தான் பழகிப் வருகிறோம் என்று கூறுகிறார்.
Also Read : பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விட்டு வெளியேறிய மருமகள்.. மீண்டும் சுக்குநூறாக உடையும் குடும்பம்