ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ, பதிலடிக்கு தயாராகும் விஜய்.. மிரட்ட வரும் லியோ ட்ரெய்லர், எப்ப தெரியுமா?

Leo-Vijay: இன்று காலை முதலே லியோ ஆடியோ லான்ச் பற்றிய விவகாரம் தான் சோசியல் மீடியாவில் அதிர்ச்சி விலகாத நிலையில் சலசலக்கப்பட்டு வருகிறது. மிகப் பெரும் ஆவலுடன் இதற்காக காத்திருந்த விஜய்யின் ரசிகர்கள் இப்போது சொல்ல முடியாத துக்கத்தில் உறைந்து போயிருக்கின்றனர்.

இதற்கு பின்னணியில் எந்த அரசியல் காரணமும் இல்லை என்று தயாரிப்பு தரப்பு சப்பை கட்டு கட்டினாலும் யாரும் நம்புவதற்கு தான் தயாராக இல்லை. ஏற்கனவே இது குறித்து பல செய்திகள் அரசல் புரசலாக பேசப்பட்டது. ஆனால் இறுதி நேரம் வரை பிரச்சனை தொடர்ந்ததால் தான் விஜய் இப்படி ஒரு கனத்த முடிவை எடுத்திருக்கிறாராம்.

Also Read: விஷ பூச்சிகள் வேலையால் திடீரென ரத்து செய்யப்பட்ட லியோ ஆடியோ லான்ச்.. அதிர்ச்சியான உண்மை காரணம்

ஏனென்றால் அவருடைய குட்டி கதைக்கு ரசிகர்கள் மொத்தமும் அடிமையாகி விடுவார்கள். ஒவ்வொரு பட இசை வெளியீட்டின் போதும் ஒட்டுமொத்த திரையுலகமும் இதற்காகவே காத்திருக்கும். அதிலும் இந்த முறை ரஜினி சொன்ன கழுகு கதைக்கு பதிலடி கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

அது நடக்காத பட்சத்தில் சோர்ந்து போய் இருக்கும் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் அடுத்த கட்ட சம்பவத்திற்கு விஜய் மற்றும் லோகேஷ் இருவரும் தயாராகிவிட்டனர். அதன்படி லியோ ட்ரெய்லர் எப்போது என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Also Read: ரெட் ஜெயண்டுக்கு தர மறுத்த விஜய்.. நேரம் பார்த்து செக் வைத்த உதயநிதி, முன்கூட்டியே கணித்த சவுக்கு சங்கர்

இனி வரும் நாட்களில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அப்டேட்டுகளை வெளியிட தயாராகும் படக்குழு அடுத்த வாரம் ட்ரெய்லரை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர். இன்னும் சில தினங்களில் அதற்கான தேதியும் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.

இதுவே ஒட்டுமொத்த சர்ச்சைக்கும் சரியான பதிலடியாக இருக்குமாம். அப்படி என்றால் ட்ரெய்லரின் ஒவ்வொரு காட்சியும் வெறித்தனமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆக மொத்தம் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ, இப்ப பாரு என்று கெத்தாக மிரட்ட வருகிறது விஜய், லோகேஷ் கூட்டணி.

Also Read: 5 வருடத்திற்கு முன்பே சமாளித்த ரஜினியிடம் தோத்துப்போன விஜய்.. என்னைக்கும் கழுகு கழுகு தான்

- Advertisement -

Trending News