Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் தற்போது நாளுக்கு நாள் அராஜகத்தின் உச்சகட்டத்தில் கொடூரமாக குணசேகரின் தம்பிகள் அட்டூழியம் செய்து வருகிறார்கள். அத்துடன் இவருக்கு துணையாக மாமியாரும், மருமகள்களை அடிமையாக இருக்கணும் என்று படாதபாடு படுத்தி எடுக்கிறார். போதாக்குறைக்கு கரிகாலன் மற்றும் ஜான்சி ராணியும் வன்மத்தை கொட்டுகிறார்கள்.
இதனால் அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் மொத்தமாக இவர்களிடம் சிக்கி தவித்துக் கொண்டு வருகிறார்கள். எப்படியாவது விடிவு காலம் பிறந்து விடாதா என்று கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து முன்னுக்கு வந்து கொண்டிருந்த இவர்கள் தற்போது மொத்தமாகவே அடங்கி போகும் நிலைமைக்கு மாறுகிறது.
இதற்கெல்லாம் காரணம் குணசேகரின் மாஸ்டர் பிளான் தான் என்று வழக்கம்போல் அடுப்பாங்கரையில் இருந்து அந்த வீட்டில் உள்ள பெண்கள் புலம்புகிறார்கள். அடுத்ததாக ஜீவானந்தம், ஈஸ்வரிக்கு போன் பண்ணி குணசேகரன் பற்றிய விஷயங்கள் எனக்குத் தெரியும் அதை நான் நேரில் சொல்கிறேன் என்று வர சொல்கிறார். அப்பொழுது குணசேகரனை நான் ஒரு பண்ண வீட்டில் பார்த்தேன்.
ஏதோ திட்டத்தில் தான் அவர் அங்கே போய் இருப்பது போல் தெரிகிறது என்று ஈஸ்வரிடம் சொல்கிறார். இதனை தொடர்ந்து கதிருக்கு குணசேகரன் போன் பண்ணி பேசுவது போல் எல்லா விஷயங்களையும் கலந்து ஆலோசிக்கிறார். ஆக மொத்தத்தில் இல்லாத கேரக்டரை வைத்து இப்போதைக்கு ஓட்டலாம் என்று அவருடைய பெயரையும், செருப்பையும் வைத்து கதை நகர்ந்து வருகிறது.
இதை பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது என்றால் ரமணா படத்தில் இறந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது போல் பாவலா காட்டுவார்கள். அது போல தான் இறந்து போன குணசேகரனுக்கு உயிர் கொடுத்து வருகிறார்கள். அதற்குக் காரணம் இந்த கேரக்டருக்கு பொருத்தமான ஆளு இப்போது வரை கிடைக்காததால் நாடகத்தை கரையேற்றுவதற்கு இந்த யுக்தியை ஃபாலோ பண்ணி வருகிறார்கள்.
அத்துடன் குணசேகரன் இருக்கும் பொழுது கூட இந்த அளவுக்கு மன அழுத்தத்தை உண்டாக்குவது போல் கொடூரமாக யாரும் நடந்து கொள்ளவில்லை. ஆனால் இப்பொழுது கதிர் மற்றும் ஞானம் ரொம்பவே அரக்கர்கள் போல நடந்து கொள்கிறார்கள். இதை பார்க்கும் பொழுது இவர்களை எல்லாம் விட குணசேகரன் ரொம்பவே நல்லவர் என்று யோசிக்க தோன்றுகிறது. அத்துடன் உண்மையில் அவருடைய அருமை தற்போது தான் புரிகிறது.