Baakhiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இப்போது எதிர்பார்க்காத பல திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் கோபிக்கு தப்பாமல் பிறந்திருக்கும் அவரது மூத்த மகன் செழியன் தனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணுடன் நெருங்கி பழகி வருகிறார்.
அதுவும் குறிப்பாக செழியன் வீட்டுக்கு வராமல் ஆபீஸில் வேலை இருப்பதாக சொல்லி அந்தப் பெண்ணின் வீட்டில் தங்கி விடுகிறார். இதனால் பாக்யாவுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இதை அடுத்து பாக்யாவுக்கு சந்தேகம் வந்ததால் உடனடியாக செழியனுக்கு போன் செய்து வீட்டுக்கு வரும்படி திட்டுகிறார்.
Also Read : விஜய் டிவி கதாநாயகி ஷோவின் டைட்டில் வின்னர் இவர்தான்.. இழுத்து மூடிட்டு புதுசாக வரும் நிகழ்ச்சி
தனது அம்மா மீது உள்ள கோபத்தை அந்த பெண்ணிடம் காட்டி விட்டு செழியன் வீட்டுக்கு வருகிறார். அப்போது ஜெனிக்கு துரோகம் செய்யாதே என்று பாக்யா கண்டபடி செழியன் திட்டுகிறார். நான் அப்படியெல்லாம் இல்ல, அப்பா ராதிகா ஓட பழகும் போது நீ சுகரிக்காமல் விட்டு விட்டாய் என்று தனது அம்மாவுக்கு அறிவுரை சொல்கிறார்.
இதனால் கோபப்பட்ட பாக்யா கோபியை தன்னால் கண்டிக்க முடியவில்லை, ஆனால் நீ என்னுடைய மகன் என்று காரசாரமாக திட்டுகிறார். இனிமேல் வேலையை முடித்துவிட்டு நேராக வீட்டுக்கு வர வேண்டும் என கண்டிஷன் போடுகிறார். அதன் பிறகு செழியன் தனது தவறை உணர்ந்து இனி சரியாக வந்து விடுகிறேன் என பாக்யாவுக்கு வாக்கு கொடுக்கிறார்.
Also Read : டிஆர்பி இல்லாததால் அதிரடியாக ஊத்தி மூடப்படும் விஜய் டிவி சீரியல்.. 1300 எபிசோடை கடந்த சீரியலாச்சே!
மற்றொருபுறம் அமிதாவின் மாமனார் மற்றும் மாமியார் மிகுந்த மனக் கவலையில் இருக்கிறார்கள். ஏனென்றால் கணேஷ் அமிர்தாவை தேடி சென்னைக்கு சென்றிருக்கிறார். இதனால் என்ன பிரச்சனை வரப்போகிறதோ என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்து உடனடியாக எழிலிடம் பேச வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள்.
அடுத்ததாக பாக்யா தன்னுடைய கேன்டீன் ஆர்டர் கையை விட்ட போக உள்ளதை நினைத்து வருத்தத்தில் இருக்கிறார். இதனால் எழில் தனது அம்மாவை சமாதானப்படுத்தி இதிலிருந்து கண்டிப்பாக உனக்கு ஒரு நல்லது நடக்கும் என்று ஆறுதல் கொடுக்கிறார். இவ்வாறு அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் பாக்கியலட்சுமி தொடர் சென்று கொண்டிருக்கிறது.
Also Read : குருநாதா இத்தனை நாளா எங்க போனீங்க.. குணசேகனுக்கு பதிலாக சரவெடியாக வெடிக்க போகும் பட்டாசு நடிகர்