Jayalalitha-Kodanad Estate: தமிழக அரசியல் வரலாற்றில் சிங்க பெண்ணாக வலம் வந்த ஜெயலலிதா இறந்த பிறகும் கூட அவரைப் பற்றிய பல செய்திகள் மர்மம் நிறைந்ததாகவே இருக்கிறது. அதில் அவருக்கு ஒரு மகள் இருக்கிறார் என வருட கணக்காக ஒரு செய்தி மீடியாவில் உலா வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் கிடையாது. அந்த அளவுக்கு அதை ஜெயலலிதா மிகவும் சீக்ரெட்டாக வைத்திருந்ததாக கூட கூறுவதுண்டு. அதையும் மீறி அவர் இறந்த பிறகு நான் தான் அவருடைய மகள் என சிலர் மீடியாவுக்கு பேட்டி கொடுத்த சம்பவமும் நடந்திருக்கிறது.
இந்நிலையில் டாக்டர் காந்தராஜ் இது குறித்த ரகசியம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதாவது ஜெயலலிதாவுக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் இருந்த திராட்சை தோட்டத்தில் தான் அவருடைய மகள் ரகசியமாக வளர்க்கப்பட்டாராம். அங்கிருந்தபடியே அந்த குழந்தையின் அப்பா சோபன் பாபுவும் அவரை பராமரித்து வந்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் சசிகலாவின் சகோதரரும் அந்த குழந்தையை கண்காணித்து வந்திருக்கிறார். அதன் பிறகு ஜெயலலிதா தன் மகளுக்கு திருமணமும் செய்து வைத்திருக்கிறார். அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் அவரின் கணவர் இறந்திருக்கிறார்.
இதனால் மகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஜெயலலிதா அவரை எங்கு வைத்து பராமரிப்பது என்ற குழப்பத்தில் இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் தான் கொடநாடு எஸ்டேட்டை வாங்கும் முடிவுக்கு அவர் வந்தாராம். இது பற்றி நாம் பல தகவல்களை கேள்விப்பட்டிருந்தாலும் அதன் உள்ளே என்ன நடக்கிறது என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது.
அந்த அளவுக்கு பல கட்டுப்பாடுகளை கொண்டு இருக்கும் அந்த பங்களாவில் தான் ஜெயலலிதா தன் மகளையும் பேத்தியையும் தங்க வைத்திருக்கிறார். இதற்கு சில ஆதாரங்களும் இருந்திருக்கிறது. அது பத்திரிகைகளில் கூட வெளிவந்த நிலையில் சாமர்த்தியமாக மறைக்கப்பட்டும் இருக்கிறது. இப்படியாக அந்த கொடநாடு எஸ்டேட் மர்மங்களும் ரகசியங்களும் நிறைந்ததாக இருக்கிறது என டாக்டர் காந்தராஜ் ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.