சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

சகுனி வேலையை சரியாக பார்த்த மாயா.. ரணகளமான பிக் பாஸ் வீடு, கொளுத்தி போட்டு வேடிக்கை பார்க்கும் சைக்கோ

Bigg Boss Season 7 Promo: பிக் பாஸ் சீசன் 7 நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது. இதிலிருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களும் வேணுங்கிற கன்டன்ட்டை வாரி வழங்குகின்றனர். அதிலும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பிக் பாஸ், ஸ்மால் பாஸ் போன்ற இரு வீட்டார்களிடமும் பகை முற்றிவிட்டது.

நேற்று நடந்த பிரச்சினையை வைத்து பிரதீப் சமைக்க முடியாது என படுக்கையிலேயே படுத்து இருக்கிறார். அவர் வந்தால் மட்டுமே சமையல் வேலையை ஆரம்பிக்க முடியும் என ஸ்மால் பாஸ் ஹவுஸ் போட்டியாளர்கள் ஸ்ட்ரைக் செய்கின்றனர். இதற்கெல்லாம் சகுனியாக மாயா தான் இருந்து மொத்த திட்டத்தையும் தீட்டுகிறார்.

இவர் தொடக்கத்திலிருந்தே ஸ்மால் பாஸ் ஹவுஸில் இருப்பவர்கள் பிக் பாஸ் போட்டியாளர்களை எப்படி எல்லாம் டார்ச்சல் செய்ய முடியுமோ அந்தந்த வகையில் எல்லாம் டார்ச்சர் செய்து வருகிறார். சாப்பாட்டில் மிளகாய் பொடியை அள்ளிப் போடுவது, சேமியாவை கேவலமாக செய்து தருவது என இவர்களுடைய அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

இப்போது மொத்தமாகவே சமைக்க முடியாது என ஸ்மால் பாஸ் ஹவுஸ் மேட்சை சகுனி மாயா ட்ரிகர் செய்துவிட்டார். இதற்கு பிரதீப்பும் ஒத்துழைத்து பிக் பாஸ் வீட்டை ரணகளம் ஆக்குகிறார். இப்படி கொழுந்து விட்டு எரியும் பிக் பாஸ் வீட்டில் இனி ஏகப்பட்ட பிரச்சனைகள் ஆரம்பிக்கப் போகிறது. ஸ்மால் பாஸ் ஹவுஸ் மேட்ஸ் சமைத்து தர முடியாது என பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு சோறு போடாமல் சாவடிக்க பார்க்கின்றனர்.

ஆனால் அவர்கள் கில்லாடித்தனமாக பிரட், ஸ்நாக்ஸ் போன்றவற்றை பதுக்குகின்றனர். அதே சமயம் ஸ்மால் பாஸ் வீட்டாரும் இதே வேலையை பார்க்கின்றனர். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் சோத்து பிரச்சனை தான் தலை விரித்தாட போகிறது. இதற்கு கமல் நிச்சயம் சரியான பதிலடி கொடுப்பார்.

பிக் பாஸ் சீசன் 7  இன்றைய ப்ரோமோ இதோ!

- Advertisement -

Trending News