எந்த வித சினிமா பின்புறமும் இல்லாமல் படிப்படியாக முன்னேறி உச்சம் பெற்ற தென்னிந்திய முன்னணி ஹீரோயின் தான் அந்த நம்பர் நடிகை. இவர் அக்கட தேசத்து வாரிசு நடிகரை உருக உருக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியரின் மீது யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல, சில வருடத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டார். இருப்பினும் புருஷனின் பிரிவை மறக்க முடியாமல் அவருடன் சேர்ந்து இருந்த நினைவுகளுடன் வாழ்ந்து வந்தார்.
அதுவும் சிலருக்கு பொருக்கல. இவர்கள் இருவரும் காதலித்த சமயத்தில் கணவரின் பெயரை நம்பர் நடிகை தன்னுடைய விலா எலும்பில் டாட்டூ போட்டிருந்தார். விவாகரத்திற்கு பிறகு அந்த டாட்டுவை அழிக்காமல் இருந்தார். ஏனென்றால் அந்த அளவிற்கு அந்த நடிகரை நம்பர் நடிகை மனசார காதலித்தார்.
இதைக் காரணம் காட்டியே, நம்பர் நடிகை விவாகரத்து ஆனாலும் மறுபடியும் கணவருடன் மீண்டும் சேரும் முடிவில் இருப்பதாக நாலா பக்கமும் கொளுத்திப் போட்டனர். அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக அதிரடியான முடிவை நம்பர் நடிகை எடுத்துவிட்டார்.
விவாகரத்திற்கு ஆன பின்பு எக்ஸ் புருஷனின் பெயர கூட வச்சிக்க கூடாது தானே என்று, கணவரின் நினைவாக குத்திக்கொண்ட டாட்டூவை தன் உடலில் இருந்து நீக்கி உள்ளார். அண்மையில் சோசியல் மீடியாவில் வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் இதை உறுதிப்படுத்தினார்.