Rajini-Leo: ஜெயிலர் அலை ஓய்ந்த நிலையில் இப்போது லியோ அலை தான் வீசி வருகிறது. லோகேஷ், விஜய் கூட்டணியில் மாஸ்டர் படத்திற்கு பிறகு லியோ படம் உருவாகி இருக்கிறது. இதுவரை தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை ஜெயிலர் படம் பெற்றிருக்கிறது. இப்படம் கிட்டத்தட்ட 650 கோடி அதிகமாக வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் ஜெயிலர் வசூலை முறியடித்து லியோ படம் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். அதற்கேற்றார் போல் சமீபத்தில் லியோ படத்திற்கு அதிகாலை காட்சி அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியானது. ஆனால் இன்று திடீரென அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது லியோ படத்தின் முதல் காட்சி 9 மணிக்கு தான் ஆரம்பம் என்று கூறப்படுகிறது. இதற்குப் பின்னால் ரஜினி தான் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது கலாநிதி மாறனுக்கு ரஜினி போன் செய்து ஜெயிலர் படத்திற்கு அதிகாலை காட்சி வாங்கி இருந்தால் கண்டிப்பாக ஆயிரம் கோடி வசூலை எட்டு இருக்கும்.
நீங்கள் ஏன் அதற்கு முயற்சி செய்யவில்லை என்று கலாநிதி மாறன் இடம் ரஜினி தொலைபேசி வாயிலாக பேசியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் இப்போது லியோ படம் அதிகாலை காட்சி திரையிட்டால் கண்டிப்பாக ஜெயிலர் வசூலை முந்திவிடும். மேலும் ஜெயிலர் படம் போல் லியோ வெளியாகி வசூல் அதிகமாக பெற்றால் சரியான போட்டி இருக்கும்.
ஆகையால் லியோ படத்திற்கு அதிகாலை காட்சி கொடுக்கக் கூடாது என ரஜினி கலாநிதி மாறனுக்கு குடைச்சல் கொடுத்ததாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் பிறகு தான் இந்தச் செய்தி மாறன் வாயிலாக பெரிய இடத்திற்கு சென்று இருக்கிறது. அதன் பிறகு ஜெயிலர் படம் போலவே லியோ படத்திற்கும் 9 மணி காட்சி தான் அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதை அறிந்த விஜய் ரசிகர்கள் லியோ வசூலை முறியடிக்க ரஜினி இப்படி ஒரு சகுனி வேலை பார்த்து உள்ளாரா என கமெண்ட் செய்து வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் என்ன தான் சூழ்ச்சி செய்தாலும் லியோ 1000 கோடி வசூல் செய்யும் என்பது உறுதி என ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த வருட தீபாவளி விஜய் ரசிகர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே லியோ படம் மூலம் வர இருக்கிறது.