திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

மன்மதக் குஞ்சின் காதல் வலையில் சிக்கிய 2 நடிகைகள்.. படு கேவலமாக ஆடும் ஆட்டம்

ஆசை ஆசையாய் பேசி பழகியே அந்த மன்மதக் குஞ்சு இரண்டு நடிகைகளை காதல் வலையில் சிக்க வைத்திருக்கிறா. அதிலும் முதலில் இளம் நடிகை ஒருவர் மன்மதனுடன் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் கூட நடனமாடிய போது காதலில் விழுந்தார். இளம் நடிகை உண்மையாக காதலித்தாலும் மன்மதக் குஞ்சு டைட்டிலை வெல்ல வேண்டும் என்பதற்காகவே லவ் பண்றது போல் நடித்து இருக்கிறார்.

அந்த ரியாலிட்டி ஷோவில் இந்த ஜோடி தான் டைட்டிலை வென்றது. ஆனால் அந்த நிகழ்ச்சி முடிந்த பின்பு மன்மதன் அந்த இளம் நடிகையை கழட்டி விட்டுட்டார். இப்போது மறுபடியும் அவர் இன்னொரு ஃபேமஸான ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்த ஷோவிலும் எப்படியாவது ஜெயிச்சு லட்சக்கணக்கில் பரிசை அள்ள வேண்டும் என்று, அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கக்கூடிய சீரியல் நடிகைக்கு காதல் வலை விரித்துள்ளார். முதலில் அவருடன் நண்பராகவே பழகிய அந்த சீரியல் நடிகை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த மன்மதனின் பேச்சால் மயங்கி காதலிக்க ஆரம்பித்து விட்டார்.

இதை வச்சு அந்த ஷோவில் எக்கச்சக்கமான கண்டன்டுகளை கொடுத்து பார்வையாளர்களை அவர் பக்கம் இழுத்து விட்டார். பாவம் அந்த சீரியல் நடிகை தான் அவரை நம்பி ஏமாறப் போகிறார். முன்பு இளம் நடிகைக்கு என்ன நடந்ததோ அதுதான் இப்போது இந்த சீரியல் நடிகைகள் நடக்கப் போகிறது.

இது பத்தாதுன்னு அந்த ரியாலிட்டி ஷோவில் மன்மதனின் நீண்ட நாள் தோழியும் இருக்கிறார். அவரும் ஒரு பக்கம் அந்த மன்மதனின் பாசத்துக்காக ஏங்குவது பார்க்கவே சகிக்கல. எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் கேவலமாக காதல் நாடகம்  ஆடிக்கொண்டிருக்கும் இந்த மன்மதக் குஞ்சின் முகத்திரை சீக்கிரம் கிழிந்து தொங்கப் போகிறது.

Trending News