வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பில்லா முதல் விடாமுயற்சி வரை.. அஜித்தின் ஆஸ்தான கலை இயக்குனர் திடீர் மரணம்  

Ajith: துணிவு படத்திற்கு பிறகு அஜித் அடுத்ததாக விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார், மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா தயாரிக்கும்  இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்கள் தள்ளிப்போன நிலையில்  இப்போதுதான் துவங்கப்பட்டிருக்கிறது,

அதற்குள்ளேயே இந்தப் படத்தில் கலை இயக்குனராக பணி புரிந்தவர் திடீரென்று உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சாபு சிரிலிடம் உதவியாளராக பணி புரிந்தவர்தான் மிலன். சாபு சிரில் கலை இயக்குனராக பணியாற்றிய சூப்பர் ஹிட் படங்கள் ஆன சிட்டிசன், தமிழன், ரெட் போன்ற படங்களில் அவருடன் மிலனும் சேர்ந்த பணியாற்றினார்.

அதை அடுத்து ஆர்யா நடிப்பில் வெளியான கலாப காதலன் படத்தின் மூலம் கலை இயக்குனராக அறிமுகமானார். பின்பு அஜித்தின் பில்லா தொடங்கி ஏகன், வீரம், விவேகம், வேதாளம் போன்ற படங்களில் அடுத்தடுத்து இவருக்கு கலை இயக்குனராக பணிப்புரிவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இப்போது விடாமுயற்சி படத்திலும் கூட மிலன் தான் கலை இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில வாரத்திற்கு முன்பு அஜர்பைஜானில் தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக அஜித், திரிஷா, இயக்குனர் மகிழ்திருமேனி உள்ளிட்ட மொத்த பட குழுவும் அஜர்பைஜானுக்கு விரைந்தது.

இவர்களுடன் கலை இயக்குனர் மிலனும் சென்றார். இந்நிலையில் இன்று காலை விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்காக ஹோட்டலில் தயாராகிக் கொண்டிருந்த மிலனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே பட குழு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி தற்போது உயிரிழந்துள்ளார்.

பில்லா முதல் தொடர்ந்து தன்னுடைய படங்களில் பயணித்த மிலன் இழப்பு அஜித்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் மட்டுமல்ல விடாமுயற்சி மொத்த பட குழுவும் இப்போது மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர். இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் இரங்கலை சோசியல் மீடியாவில் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

Trending News