திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

15 கிலோ உடல் எடை குறைத்து சுருளிராஜன் போல மாறிய விஜய் சேதுபதி.. மிஷ்கின் வெளியிட்ட புகைப்படம்

Vijay Sethupathi-Mysskin: விஜய் சேதுபதியின் கால்ஷீட் கிடைப்பது இப்போது குதிரைக்கொம்பாக இருக்கிறது. அதாவது சில வருடங்களுக்கு முன்பு தமிழ் மொழியில் அதிக படங்கள் நடித்து வந்தார். அதுவும் மாதத்திற்கு குறைந்தபட்சம் ஒரு படமாவது விஜய் சேதுபதியின் நடிப்பில் படங்கள் வெளியாகி விடும். ஆனால் இப்போது விஜய் சேதுபதி மிகவும் தன்னை பிஸியாக வைத்துக் கொள்கிறார்.

ஏனென்றால் தமிழ் படங்கள் நிறைய இருந்தாலும் அக்கடதேச மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக பாலிவுட்டில் விஜய் சேதுபதி கைவசம் நிறைய படங்கள் இருக்கிறது. ஆனால் இப்போது அதிர்ச்சி தரும் விதமாக விஜய் சேதுபதியின் புதிய லுக் இருக்கிறது. பொதுவாக விஜய் சேதுபதியின் படங்களில் அவருடைய லுக்கு ஒரே மாதிரி தான் இருக்கும்.

அதனால் தான் அவர் நிறைய படங்களில் அடுத்தடுத்து நடிக்க முடிந்தது. ஆனால் இதற்கு இப்போது முட்டுக்கட்டை போடும் விதமாக மிஷ்கின் ஒரு காரியத்தை செய்திருக்கிறார். இப்போது இயக்குனர் என்பதை காட்டிலும் நடிகராக பின்னி பெடல் எடுத்துக் கொண்டிருக்கிறார் மிஷ்கின். சமீபத்தில் அவருடைய நடிப்பில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் வெளியானது.

இப்போது விஜய்யின் லியோ படத்திலும் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தன்னுடைய இயக்கத்திலும் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். விஜய் சேதுபதி மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை மிஸ்கின் இயக்கியுள்ள நிலையில் இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய் சேதுபதியை வைத்து மற்றொரு படத்தை மிஷ்கின் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக ஜெயராம் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்திற்காக கிட்டத்தட்ட 15 கிலோ உடல் எடை குறைத்து சுருளிராஜன் லுக்கில் இருக்கிறார் விஜய் சேதுபதி. அவரது மீசையும் அப்படியே சுருளிராஜன் போல தான் இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் மறைந்த பழம்பெறும் நடிகர் சந்திரபாபு பொருளும் தெரிகிறார்.

ஆகையால் சந்திரபாபு வாழ்க்கை வரலாறு படத்தை மிஷ்கின் எடுக்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டு இருந்தது. ஆனால் இந்த படம் ட்ரெயின் என்று பெயர் வைக்கப்பட உள்ளதால் எந்த மாதிரியான கதை படம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதோடு மட்டுமல்லாமல் இப்போது விஜய் சேதுபதி இந்த லுக்கில் இருப்பதால் மற்றப் படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் இந்த படத்தை ஒரே மூச்சாக எடுத்து முடிக்கலாம் என்று படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

சுருளிராஜன் போல மாறிய விஜய் சேதுபதி

vijay-sethupathi
vijay-sethupathi

Trending News