Leo-Rajini-vijay: இப்போது அதிர்ச்சிகரமான விஷயம் ஒன்று வெளியாகி இருக்கிறது. லியோ படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் திடீரென இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள் மற்றும் வெற்றி அடைய ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் என்ற ரஜினி கூறியிருக்கிறார். அதாவது விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே தான் இப்போது போட்டி போய் கொண்டு இருக்கிறது.
திடீரென ரஜினி லியோ படத்தை வாழ்த்த என்ன காரணம் என்பது வெளியாகி இருக்கிறது. அதாவது ஒரு படம் மக்களைக் கொண்டு சேர வேண்டும் என்றால் பிரமோஷன் என்பது இப்போது முக்கியமாக இருக்கிறது. எனவே லியோ ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் ரசிகர்களை எப்படியும் கவர்ந்து விடலாம் என விஜய் பல விஷயங்களை யோசித்து வைத்திருந்தார்.
ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. இதைத்தொடர்ந்து லியோ படத்தில் வன்முறை காட்சி மற்றும் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் இது ஒரு சர்ச்சையாக வெடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ரஜினியே லியோ படத்தை பற்றி பாராட்டி விட்டால் இது மிகப்பெரிய பிரமோஷன் ஆக அமைந்து விடும்.
ஆகையால் விஜய் ரஜினிகாந்தின் பிஆர்ஓ ரியாஸ் அகமது என்பவருக்கு போன் செய்து லியோ படத்தை பற்றி ரஜினியிடம் சொல்ல சொல்லி இருக்கிறார். அதேபோல் அவரும் ரஜினியிடம் இந்த படத்தைப் பற்றி சொல்லும்போது எப்போதுமே படத்தை பார்த்து விட்டு ரஜினி பாராட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
லியோ படம் வெளியான பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு ரஜினி தூங்க சென்று விட்டாராம். முதல் படம் வெளியாவதற்கு முன்பே ரஜினி லியோ படத்தை பற்றி சொல்ல வேண்டும் என படக்குழு மிகுந்த விருப்பப்பட்டிருக்கிறது. ஏனென்றால் ஆந்திரா, தெலுங்கானா போன்ற இடங்களில் லியோ படத்திற்கான பவர் கம்மியாக உள்ளதாக கருதப்பட்டுள்ளது.
ஆகையால் மீண்டும் ரியாஸ் ரஜினியிடம் இது குறித்து பேசி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தூத்துக்குடி பத்திரிக்கையாளர் சந்திப்பில் லியோ படத்தை பற்றிய கேள்வி கேட்கும் படியும் ரியாஸ் அறிவுறுத்தி இருக்கிறார். அதேபோல் லியோ படத்தை கேட்கும்போது ரஜினியும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.