Vijay-Thalapathy 68: ஒட்டு மொத்த திரையுலகமும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் லியோ நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் படத்தை திருவிழா போல் கொண்டாடுவதற்கு ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். சில பல பிரச்சனைகளை இப்படம் சந்தித்தாலும் தற்போது வசூலில் மாஸ் காட்டுவதற்கு தயாராகி இருக்கிறது.
மேலும் முதல் நாளிலேயே உலக அளவில் 100 கோடி வரை தட்டி தூக்கும் என்று கணிக்கப்பட்டு வரும் நிலையில் விஜய்யின் தளபதி 68 அப்டேட்டும் ஒரு பக்கம் வைரலாகி கொண்டிருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரு கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, சினேகா, பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைய இருக்கின்றனர்.
அது மட்டுமின்றி இப்படத்தில் இள வயது தோற்றத்தில் நடிப்பதற்காக விஜய்க்கு அமெரிக்காவில் டி ஏஜிங் முறையும் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இப்போது வெளியாகி இருக்கும் ஒரு போட்டோவும் அவரை 10 வயது குறைந்தது போல் காட்டி இருக்கிறது. ஏற்கனவே விஜய் 49 வயது என்று சொல்ல முடியாத அளவிற்கு தான் இருக்கிறார்.
இளைஞர் போல் உற்சாகத்துடன் ஆடும் அவருடைய ஆட்டமும், துள்ளலான நடிப்பும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். இதில் தளபதி 68ல் கியூட் லுக்கில் அவர் வர இருப்பது பெரும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் போட்டோவில் கருப்பு நிற சட்டை அணிந்திருக்கும் அவர் ட்ரிம் செய்யப்பட்ட தாடி, வித்தியாசமான ஹேர் ஸ்டைல் என கலக்கலாக இருக்கிறார்.
அந்த போட்டோ தான் இப்போது மீடியாவை அசத்திக் கொண்டிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நீ கலக்கு தலைவா என ஆரவாரம் செய்து வருகின்றனர். அதன்படி சமீபத்தில் தளபதி 68 பூஜை போடப்பட்ட நிலையில் படகுழு லியோ பட ரிலீஸுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
ஏனென்றால் அதன் பிறகு தான் அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுக்க வேண்டும் என்பதில் அவர்கள் கவனத்துடன் உள்ளனர். அதற்காகவே காத்திருக்கும் ரசிகர்கள் லியோ ரிலீஸோடு சேர்த்து இந்த அப்டேட்டையும் தெறிக்க விட இருக்கின்றனர். ஆக மொத்தம் தளபதி 68 லியோவை ஓவர் டேக் செய்யும் அளவுக்கு மாஸாக வர இருக்கிறது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.