Leo-Vijay: பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலும் ஆட்டுகிறான் என்ற பழமொழி பலரும் அறிந்த ஒன்றுதான். அதேபோல் தான் லியோ படத்தில் சகுனி வேலை பார்த்தது அம்பலமாகி இருக்கிறது. அதாவது அதிகாலை காட்சி கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் போராடி பார்த்தார். ஆனால் கடைசியில் ஒன்பது மணி காட்சிக்கு மட்டும் அரசு அனுமதித்துள்ளது.
இப்போது அதிகாலை காட்சி ரத்துக்கான காரணம் என்ன என்பது வெளியாகி உள்ளது. அதாவது தியேட்டர் முதலாளிகள்தான் ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகளுக்கு மேல் எங்களுக்கு வேண்டாம் என்று மொத்தமாக பல்டி அடித்திருக்கிறார்கள். அதாவது அதிக காட்சி இருந்தால் முதலில் வசூல் அதிகமாகும் என்று திட்டமிட்டது அவர்கள்தான்.
ஆனால் இப்போது அப்படியே தலைகீழாக மாற்றுவதற்கு காரணம் சில விஷயங்கள் கூறப்படுகிறது. அதாவது தியேட்டர் முதலாளிகள் காலை 4:00 மணி மற்றும் 5:00 மணி காட்சி எல்லாம் எங்களுக்கு வேண்டாம் என்று அதிரடியாக கூறுகின்றனர். இதற்குக் காரணம் ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் எங்களால் நடத்த முடியாது என்று கூறி இருக்கின்றனர்.
மேலும் ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் வைத்தால் வருகின்ற வாகனங்கள் எந்த இடையூறு இல்லாமல் எங்களால் சரியாக நிர்வகிக்க முடியும். அதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் லியோ படத்திற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதால் நிறைய காட்சிகள் வைத்தால் அசம்பாவிதம் நடக்கவும் வாய்ப்பிருக்கிறது.
அவர்களை எங்களால் சமாளிக்க முடியாது. ஆகையால் அதிகாலை காட்சிகள் வேண்டாம் என்று அதிரடியாக கூறியிருக்கிறார்கள். இவர்கள் சொல்வதும் காரணமும் சரியாக இருப்பதால் அரசாங்கமும் இதை ஏற்று இருக்கிறது. லியோ தயாரிப்பாளர் முதல் நாளே 100 கோடியை அள்ளலாம் என்று எதிர்பார்த்தார்.
ஆனால் அவர் தலையில் இடியை இறக்கும்படியாக தியேட்டர் ஓனர்களே இந்த விஷயம் செய்திருப்பது அதிர்ச்சியாக தான் இருக்கிறது. மேலும் திரையரங்கு பாதுகாப்புக்காக தான் அவர்களும் இந்த விஷயத்தை செய்திருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளராக லலித் கூறியதும் சரி தான் தியேட்டர் ஓனர்களின் கோரிக்கையும் சரியான ஒன்று தான்.